Apple iPhone 11: வெறும் ரூ.9,140க்கு கிடைக்கும் ஆப்பிள் ஐபோன் 11! எங்கே, எப்படி வாங்கலாம்?

Published : May 23, 2023, 07:01 PM IST
Apple iPhone 11: வெறும் ரூ.9,140க்கு கிடைக்கும் ஆப்பிள் ஐபோன் 11! எங்கே, எப்படி வாங்கலாம்?

சுருக்கம்

அதிகம் விற்பனையாகும் ஆப்பிள் ஐபோன் மாடல் பிளிப்கார்டில் அதிரடி சலுகையுடன் 9,140 ரூபாய் விலையில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் விற்பனையில் ஆப்பிள் ஐபோன் 11 பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது. 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் ரூ.64,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 மொபைல் போன் 2020ஆம் ஆண்டில் உலகளவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் ஆகும்.

மேலும் இது இதுவரை மிகவும் பிரபலமான ஐபோன் மாடல்களில் ஒன்றாவும் உள்ளது. ஆப்பிள் ஐபோன் 14 சீரீஸ் வந்த பிறகு இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இருப்பினும் ஐபோன் 11 மொபைல் நல்ல கேமராவுடன் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கிறது.

44 நிமிடத்தில் சார்ஜ்.! 5 வருடத்துக்கு அப்டேட்.! ஐபோனுக்கே டஃப் கொடுக்கும் OPPO F23 5G எப்படி இருக்கு?

ஆப்பிள் ஐபோன் 11 சீரிசில் பேசிக் மாடலாக ஐபோன் 11 வந்தது. ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகியவையும் இந்த வரிசையில் அடங்கும். உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் ஆப்பிள் ஐபோன் 11 இன்னும் ஆன்லைனில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்நிலையில், ஆப்பிள் ஐபோன் 11 தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.34,760 தள்ளுபடியுடன் வெறும் 9,140 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 11 பிளிப்கார்ட்டில் ரூ.2,701 விலை குறைப்புக்குப் பிறகு ரூ.41,199க்கு விற்கப்படுகிறது. அதோடு, வாங்குபவர்கள் ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டில் 5% கேஷ்பேக்கைப் பெறலாம். இதன் மூலம் விலை ரூ.39,140 ஆகக் குறைக்கப்படுகிறது. இது தவிர, பிளிப்கார்ட்டில் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஜ் செய்தால் ரூ.30,000 வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

ஸ்பைக் காலில் அதிகாரிகள் போல் நடித்து பெண் டாக்டரிடம் ரூ.4.5 கோடி சுருட்டிய சைபர் கும்பல்

இவ்வாறு ரூ.34,760 தள்ளுபடிக்குப் பிறகு, பிளிப்கார்ட்டில் இருந்து வெறும் ரூ.9,140க்கு ஆப்பிள் ஐபோன் 11 மொபைல் போனை வாங்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 11 6.1 இன்ச் ஹெச்.டி. டிஸ்பிளே கொண்டது. A13 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது தற்போது சந்தையில் கிடைக்கும் மலிவு விலை ஐபோன்களில் ஒன்றாக இருக்கிறது. 2020ஆம் ஆண்டில் உலகளவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் என்ற பெருமைக்கு  உரியது. பின்புறத்தில் இரட்டை 12MP கேரமா, முன்பக்கத்தில் 12MP செல்ஃபி கேமரா உள்ளன.

தப்பா மெசேஜ் அனுப்பிட்டீங்களா.. 15 நிமிசத்துல எடிட் பண்ணிக்கலாம் தெரியுமா? வாட்ஸ்அப் அப்டேட்

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

WhatsApp Users Alert: உங்க அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? இந்த 5 அறிகுறி இருந்தா ஆபத்து!
Samsung S26 Leak: சும்மா மிரட்டலா இருக்கே! வெளியானது சாம்சங் S26 சீரிஸ் டிசைன் - ஆப்பிளுக்கே டஃப் கொடுக்கும் போல!