ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைத்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் ஆல்-இன்-ஒன் திட்டங்களை மாற்றியமைத்து இருக்கிறது. பிரீபெயிட் மொபைல் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தி பின் இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மூன்று ஜியோபோன் திட்டங்களும் மாற்றH்பட்டு புதிய ஜியோபோன் திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஜியோபோன் திட்டங்கள் அனைத்தும் ஜியோபோன்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை ஜியோபோனில் மட்டுமே வேலை செய்யும். இதனால் சிம் கார்டை மூன்றாம் தரப்பு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியாது. ஜியோபோன் ரூ. 152 திட்டம் புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தினமும் 0.5GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 300 SMS, ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய ரூ. 152 திட்டம் தவிர ரூ. 155, ரூ. 186 மற்றும் ரூ. 749 ஜியோபோன் திட்டங்களும் மாற்றப்பட்டுள்ளன. ரூ. 155 ஜியோபோன் திட்டத்தின் விலை தற்போது ரூ. 186 என மாறி இருக்கிறது. இதில் 28 நாட்களுக்கான வேலிடிட்டி, தினமும் 1GB டேட்டா, 100 SMS, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ரூ. 749 ஜியோபோன் திட்டத்தின் விலை தற்போது ரூ. 899 என மாறி இருக்கிறது. இதில் தினமும் 2GB டேட்டா, 28 நாட்களுக்கும், அதன்பின் 336 நாட்களுக்கு 24GB டேட்டாவும் வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 50 SMS, ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும்.