2GB ரேம், விண்டோஸ் 10 ஓ.எஸ்.... அதிரடியாக உருவாகும் ஜியோபுக் லேப்டாப்

By Kevin Kaarki  |  First Published Feb 5, 2022, 10:28 AM IST

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபுக் லேப்டாப் மாடல் விண்டோஸ் 10 ஓ.எஸ். கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


ஜியோபுக் லேப்டாப் மாடல் பற்றிய விவரங்கள் நீண்ட காலமாக இணையத்தில் வெளியாகி வருகிறது. முன்னதாக கீக்பென்ச் தளத்தில் லீக் ஆன நிலையில், தற்போது இந்த லேப்டாப் ஹார்டுவேர் சான்று பெற்று இருக்கிறது. அந்த வகையில், ஜியோபுக் ஒ.எஸ். விவரங்கள் தெரியவந்துள்ளது.

இந்த லேப்டாப் 400830078 எனும் ஐ.டி. கொண்டிருக்கிறது. மேலும் இந்த லேப்டாப் விண்டோஸ் 10 ஓ.எஸ். கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஜியோபுக் லேப்டாப் மாடலை எம்டோர் டிஜிட்டல் டெக்னாலஜி லிமிடெட் எனும் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. பின் இந்த மாடல் ஜியோபுக் பெயரில் விற்பனைக்கு வரும். 

Tap to resize

Latest Videos

undefined

அம்சங்களை பொருத்தவரை ஜியோபுக் மாடலில் மீடியாடெக் MT8788 பிராசஸர், 2GB ரேம் உள்பட எண்ட்ரி லெவல் அம்சங்களே வழங்கப்படும் என கூறப்படுகிறது. முந்தைய கீக்பென்ச் விவரங்களின் படி இந்த லேப்டாப் சிங்கில் கோரில் 1178 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 4246 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. 

லேப்டாப் தவிர ரிலைன்ஸ் ஜியோ விரைவில் ஜியோபோன் 5ஜி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 6.5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, 13MP டூயல் பிரைமரி கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், ஐந்து 5ஜி பேண்ட்களுக்கான வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

click me!