லீக் ஆன போஸ்டர், விரைவில் இந்தியா வரும் போக்கோ ஸ்மார்ட்போன்

By Kevin Kaarki  |  First Published Feb 5, 2022, 9:44 AM IST

போக்கோ நிறுவனத்தின் M4 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 


போக்கோ நிறுவனம் தனது M4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து விட்டது. எனினும், இந்த மாடல் இந்தியாவில் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில், விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை போக்கோ M4 ப்ரோ 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 90Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்படுமா அல்லது 4ஜி வேரிண்யட் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

தற்போது லீக் ஆகி இருக்கும் டீசரில் போக்கோ ஸ்மார்ட்போனின் படம் மட்டும் இடம்பெற்று இருக்கிறது. இதனால் இந்தியாவில்  M4 ப்ரோ ஸ்மார்ட்போனின் எந்த வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. எந்த வேரியண்டாக இருந்தாலும் இந்த ஸ்மார்ட்போன் புளூ நிறத்தில் கிடைக்கும் என டீசரில் தெரியவந்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

முன்னதாக போக்கோ M4 ப்ரோ 4ஜி மாடல் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது. அந்த வகையில், இந்தியாவில் இரு மாடல்களில் எந்த வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என்பது தெளிவற்ற நிலையிலேயே இருக்கிறது.

போக்கோ M4 ப்ரோ 5ஜி அம்சங்கள்

அம்சங்களை பொருத்தவரை போக்கோ M4 ப்ரோ 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ IPS LCD பேனல், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர், 4GB/6GB/8GB ரேம், 64GB/128GB/256GB மெமரி, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. 

புகைப்படங்களை எடுக்க 50MPO பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

click me!