ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE 3 மாடல் வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் SE 3 மாடல் மார்ச் மாதம் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே நிகழ்வில் ஆப்பிள் புதிய ஐபேட் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட முதல் ஐபோன் SE மாடல் இது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
5ஜி கனெக்டிவிட்டி மட்டுமின்றி, மேம்பட்ட கேமரா மற்றும் அதிவேக பிராசஸர் உள்ளிட்டவை புதிய ஐபோன் SE 3 மாடலில் வழங்கப்பட இருக்கிது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது சக்திவாய்ந்த சிப்செட்கள் கொண்ட புதிய மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது.
அறிமுக நிகழ்வுக்கு இன்னும் ஒரு மாத காலம் தான் இருக்கிறது. இதனால் உற்பத்தியில் தாமதம் மற்றும் வேறு சில மாற்றங்கள் காரணமாக ஆப்பிள் திட்டம் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம். எனினும், இதுவரை மார்ச் மாத நிகழ்வு பற்றி ஆப்பிள் தரப்பில் இதுவரை எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் மூன்று புதிய ஐபோன் மாடல்கள், இரண்டு புதிய ஐபேட் மாடல்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்தது. இவை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. ஐபோன் SE 3 மாடல் விலை 300 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 22,500 என துவங்கும் என்றும் புதிய ஐபேட் மாடல்களின் விலை 500 (இந்திய மதிப்பில் ரூ. 37,400) முதல் 700 டாலர்களில் (இந்திய மதிப்பில் ரூ. 52,400) துவங்கலாம்.