நாட்டின் முதல் சாட்காம் சேவையை ஜியோ வழங்கத் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அனுமதி பெற ஜியோ சார்பில் அனைத்து ஆவணங்களும் IN-SPACe நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் எந்த மூலையிலும் இன்டர்நெட் வசதி கிடைக்க எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் திட்டம், அமேசான் நிறுவனத்தின் புராஜெக்ட் குயிப்பர் திட்டம் போன்றவை உள்ளன. செயற்கைக்கோள் மூலம் இணைய வசதி வழங்க முடியும் என்பதால், தடையற்ற இன்டர்நெட் சேவையை பயன்படுத்த முடியும்.
இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஜியோஸ்பேஸ் ஃபைபர் எனும் புதிய திட்டத்திற்கு அனுமதி கோரியுள்ளது. இதன் மூலம் செயற்கைக்கோள் அடிப்படையில் ஜிகாபிட் ஃபைபர் சேவை விரைவில் இந்தியாவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
இதன் மூலம் நாட்டின் முதல் சாட்காம் சேவையை ஜியோ வழங்கத் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அனுமதி பெற ஜியோ சார்பில் அனைத்து ஆவணங்களும் IN-SPACe நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஸ்பேஸ்எக்ஸ் நிகழ்ச்சிக்கு முழு போதையில் வந்து அசிங்கமாகப் பேசிய எலான் மஸ்க்!
ஏற்கெனவே ஃபைபர் இன்டர்நெட் சேவையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, கடந்த ஆண்டு நடந்த இந்தியன் மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் இந்த சாட்காம் தொழில்நுட்பத்தில் இணைய சேவை வழங்குவது குறித்து அறிவித்தது. இதற்காக குஜராத்தின் கிர், சத்தீஸ்கரின் கோர்பா, ஒடிசாவின் நப்ராங்பூர், அசாமின் ஓஎன்ஜிசி-ஜோர்ஹாட் நான்கு இடங்களில் ஜியோ சோதனை நடத்தி வருகிறது.
இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்குவதற்காக, லக்சம்பேர்க்கைச் சேர்ந்த செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான Société Européenne des Satellites (SES) உடன் ஜியோ ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி, ஜியோ அந்த நிறுவனத்தின் செயற்கைக்கோளை இணைய சேவை வழங்க பயன்படுத்திக்கொள்ளும்.
இஸ்ரோவில் பாலின பாகுபாடு இல்லை: ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி உறுதி