ஸ்பேஸ்எக்ஸ் நிகழ்ச்சிக்கு முழு போதையில் வந்து அசிங்கமாகப் பேசிய எலான் மஸ்க்!

By SG Balan  |  First Published Jan 7, 2024, 2:56 PM IST

நிறுவனத்தில் நடத்தப்படும் போதைப்பொருள் சோதனையில் எலான் மஸ்க் ஒருமுறைகூட அவர் போதைப்பொருள் உட்கொண்டதாகத் தெரியவரவில்லை என்கிறார் அவரது வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோ.


கோஸ்வரரான எலான் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் முழு போதையுடன் வந்து கலந்துகொண்டதாகவும் போதையில் கண்டபடி உளறினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க் கெட்டமைன் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தினார் என்ற செய்தி கடந்த ஆண்டு பேசுபொருளானது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்த பலர் அவரது போதை மருந்து பயன்பாடு குறித்து கருத்து கூறியுள்ளனர். இந்தப் பழக்கம் அவரது உடல்நலத்தில் மட்டுமின்றி அவர் நிர்வகிக்கும் வணிக சாம்ராஜ்யத்தையும் பாதிக்கக்கூனும் என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

அவர் எல்எஸ்டி, கோகோயின், எக்ஸ்டஸி மற்றும் சைகடெலிக் போதை மருந்துகளை அடிக்கடி உட்கொண்டதாகக் கூறுகிறார்கள், எலான் மஸ்க் சைகடெலிக் போன்ற மருந்துகளைப் பயன்படுத்த மருந்துச் சீட்டு வைத்திருப்பதாகவும், முன்பு மரிஜுவானா மருந்தை பயன்படுத்தி இருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

இஸ்ரோவில் பாலின பாகுபாடு இல்லை: ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி உறுதி

2018 இல் லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் அளித்த ஒரு விருந்து நிகழ்ச்சியில், பல ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொண்டார். அடுத்த ஆண்டு மெக்சிகோவில் நடந்த பார்ட்டியில் மேஜிக் மஷ்ரூம்களைப் பயன்படுத்தினார். அவரும் அவரது சகோதரர் கிம்பல் மஸ்க்கும் 2021 இல் மியாமியில் ஆர்ட் பாசல் ஹவுஸ் பார்ட்டியில் கலந்துகொண்டபோது கேடமைன் உட்கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் முன்னாள் குழு உறுப்பினர் ஸ்டீவ் ஜுர்வெட்சனுடன் சேர்ந்து, எலான் மஸ்க் தடை செய்யப்பட்ட போதைப்பொருளையும் பயன்படுத்தி இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஸ்லாவின் முன்னாள் இயக்குநரான லிண்டா ஜான்சன் ரைஸ், எலான் மஸ்க்கின் ஒழுங்கற்ற நடத்தை மற்றும் போதைப்பொருள் பயன்பாடு காரணமாக மிகவும் கோபமடைந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் வழக்கமாக நடைபெறும் போதைப்பொருள் சோதனையில் ஒருமுறைகூட அவர் போதைப்பொருள் உட்கொண்டதாகத் தெரியவரவில்லை என எலான் மஸ்க்கின் வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோ தெரிவிக்கிறார்.

இஸ்ரோவின் ஆதித்யா எல்1 எத்தனை ஆண்டுகள் செயல்படும்? என்னென்ன ஆய்வுகள் செய்யும்?

click me!