OIS கேமராவுடன் கூடிய ரெட்மி நோட் 12 ப்ரோ ஜனவரி 5 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக ரெட்மி நிறுவனம் உறுதி செய்துள்ளது
ஷாவ்மி நிறுவனம் கடந்த அக்டோபர் 28 அன்று சீனாவில் Redmi Note 12 Pro சீரிஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இந்தியாவிலும் அதே போன், சில மாறுபாடுகளுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஷாவ்மி நிறுவனத்தின், துணை நிறுவனமான Redmi ஜனவரி 5 ஆம் தேதி இந்தியாவில் Redmi Note 12 Pro அறிமுகமாகும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. 200 மெகா பிக்சல் கேமராவுடன் Redmi Note 12 Pro Plus இருப்பதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
Redmi Note 12 Pro ஸ்மார்ட்போனானது, OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) தொழில்நுட்பத்துடன் கூடிய பிரைமரி கேமரா கொண்டுள்ளது. இது வீடியோக்கள் மற்றும் ஸ்டில் புகைப்படங்களை அசைவுகளை சரிசெய்து நிலையாக பிடிக்கும். மேலும், Redmi Note 12 Pro ஸ்மார்ட்போனில் 2400x1080 பிக்சல்கள், 120Hz ரெப்ரெஷ் ரேட், பெரிய 6.67-இன்ச் OLED டிஸ்ப்ளே எதிர்பார்க்கலாம். சிறந்த பார்வை அனுபவத்திற்காக ஃபோன் டிஸ்ப்ளே டால்பி விஷன் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கலாம்.
மீடியாடெக் டிமன்சிட்டி 1080 சிப்செட்டுடன் 12GB RAM + 256GB மெமரியுடன் வருகிறது. 67W சார்ஜிங்குடன் 5,000mAh சக்திகொண்ட பேட்டரி இருக்கலாம்.
அதே நேரத்தில் Redmi Note 12 Pro Plus ஸ்மார்ட்போனில் 200W ஃபாஸ்ட் சார்ஜிங் எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு கேமராவாக இருக்கும். Redmi Note 12 Pro ஆனது OIS உடன் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவுடன் வரலாம். முன் பேனலில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நோக்கியா C31 ஸ்மார்ட்போன் அறிமுகம்! 10 ஆயிரம் ரூபாய்க்கு வெரார்த்தா?
ரெட்மி நோட் 12 ப்ரோ போனில் 5ஜி, வைஃபை 6, ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எம்ஐயுஐ 13 மற்றும் என்எப்சி ஆகியவை உள்ளன. சீனாவில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலுக்கான விலை CNY 1699 (தோராயமாக ரூ. 19,300) என்று நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல் 12 ஜிபி ரேம் ஸ்மார்ட்போனின் விலை CNY 2,199 (தோராயமாக ரூ. 24,900) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய விலைகள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ரூ.30,000 வரை இருக்கம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.