இன்னும் கொஞ்ச நாளில் Redmi Note 12 5G அறிமுகம் செய்யப்படுகிறது, விலை என்னவாக இருக்கும்?

Published : Dec 25, 2022, 09:14 AM IST
இன்னும் கொஞ்ச நாளில் Redmi Note 12 5G அறிமுகம் செய்யப்படுகிறது, விலை என்னவாக இருக்கும்?

சுருக்கம்

ரெட்மி நோட் 12 சீரிஸ் இந்தியாவில் வரும் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் நிலையில், பயனர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

Redmi Note 12 ஏற்கனவே சீனாவில் கிடைக்கிறது. அந்த வேரியண்ட் தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் உள்ளிட்ட மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த மூன்றில், ரெட்மி நோட் 12 மலிவான மாடலாக இருக்கும், ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மிகவும் விலையுயர்ந்த வேரியண்டாக ஆகும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme 10 சீரிஸ் ஸ்மார்ட்போனுக்குப் போட்டியாக Redmi Note 12 சீரிஸ் இருக்கலாம் என்று தெரிகிறது.

ரெட்மி நோட் 12 இன் சீனா மாடல் போனில் பின்புற பேனலில் இரட்டை கேமராக்களுடன் வருகிறது, அதே நேரத்தில் இந்தியாவில் தொடங்கும் வேரியண்ட் மூன்று கேமராக்களுடன் வருகிறது. கேமரா அமைப்பில் உள்ள வேறுபாட்டைத் தவிர, சீன மற்றும் இந்திய மாடல்களின் பிற சிறப்பம்சங்கள் ஒரே மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi Note 12 5G விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

அறிமுகத்திற்கு முன்னதாக, நிறுவனம் Redmi Note 12 5G பற்றியும், அது எப்போது கிடைக்கும் என்பது பற்றியும் பல விவரங்களை ஷாவ்மி நிறுவனம் வெளியிட்டது. இந்த வார தொடக்கத்தில் அமேசான் இணையதளத்தில் சில அம்சங்கள் பட்டியலிடப்பட்டது. அதன்படி, ரெட்மி நோட் 12 5ஜியில் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா இடம்பெறும், இது சீன மாடலைப் போன்றது. மற்ற கேமரா விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும், ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனில் மேற்புறத்தில் நடுவில் பஞ்ச்-ஹோல் நாட்ச் உள்ளது,  AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசசர் ஆகியவை உள்ளன.  சீன மாடலில் Qualcomm Snapdragon 4 Gen 1 செயலியுடன் வருகிறது, மேலும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ரெட்மி நோட் 12 5ஜி மிகமெலிதான ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதையும் அமேசான் டீஸர் வெளிப்படுத்தியது.

Redmi Note 12 5G இன் சீன வேரியண்ட் 5000mAh பேட்டரி, 120hz ரெப்ரெஷ் ரேட், 6.67-இன்ச்டிஸ்ப்ளே, 8GB வரை ரேம் வசதி, 256GB மெமரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்திய மாடலும் இந்த அம்சங்கள் அனைத்தையும் பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

OnePlus 11 -க்குப் போட்டியாக களமிறங்கும் iQOO 11

இந்தியாவில் Redmi Note 12 விலை (எதிர்பார்க்கப்படுவது)

விலையைப் பொறுத்தவரை, Redmi Note 12 5G ஆனது சீனாவில் அடிப்படை 4GB RAM மற்றும் 128GB சேமிப்பக மாடலுக்கான CNY 1199 இல் தொடங்குகிறது. இதன் விலை தோராயமாக ரூ.13500 ஆகும். மற்ற மூன்று மாடல்களும் அதாவது - 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி ஸ்மார்ட்போன் CNY 1299 (சுமார் ரூ.14500), 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்மார்ட்போன் CNY 1499 (சுமார் ரூ.17000), , 8ஜிபி ரேம் + 256ஜிபி விலை  CNY 1699 (சுமார் ரூ. 19300) ஆகும்.

இப்போது, ​​நிறுவனம் Redmi Note 12 5G இன் இந்திய விலையை இன்னும் வெளியிடவில்லை. ஆனால் சீனாவில் கிடைக்கும் மாடலை விட இந்திய மாடல் சிறந்த கேமரா அம்சங்களை கொண்டிருப்பதால் சற்று கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல்: ரூ.14,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 10! வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
அனுமதி இல்லாமல் போட்டோவை பயன்படுத்தினால் சிறை?.. டீப் ஃபேக் மசோதா சொல்வது என்ன? முழு விவரம் இதோ!