ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2023 புத்தாண்டு பிளான் விவரங்களை அறிவித்துள்ளது. இதில் எவ்வளவு டேட்டா, இன்னும் பிற சலுகைகள் குறித்த விவரங்களைக் காணலாம்.
ஜியோ நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது, அந்த வகையில், 2022 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், ரூ. 2023 விலையில் ஹேப்பி நியூ இயர் 2023 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.2023 விலையில், இந்த புதிய ஜியோ நியூ இயர் திட்டத்தின் மூலம் அன்லிமிடேட் வாய்ஸ் கால், 252 நாட்கள் வேலிடிட்டி, இன்டர்நெட் டேட்டா வழங்குகிறது.
ரூ 2023 திட்டம் இப்போது Jio.com இல் கிடைக்கிறது, மேலும் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்கள் MyJio செயலி அல்லது Google Pay மற்றும் PhonePe உள்ளிட்ட மூன்றாம் தரப்பு மொபைல் ரீசார்ஜ் தளங்களில் ஏதேனும் ஒன்றின் மூலம் பெறலாம். இப்போது, புதிய ஜியோ நியூ இயர் 2023 திட்டம் வழங்கும் நன்மைகளைப் பார்க்கலாம்:
ரூ 2023 ரீசார்ஜ் பிளானனது, 252 நாட்கள் வேலிடிட்டியுடன், 9 மாதங்களுக்கு அன்லிமிடேட் வாய்ஸ்கால் வசதிகளை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இதன் வேலிடிட்டி காலத்தில் சுமார் 630 ஜிபி டேட்டாவை அனுபவிக்கலாம்.. கூடுதலாக, ரூ.2023 திட்டமானது ஜியோ ஆப்ஸிற்கான இலவச சந்தாவையும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. புத்தாண்டு சலுகையின் கீழ், புதிய சந்தாதாரர்களுக்கு ஜியோ இலவச பிரைம் மெம்பர்ஷிப்பை வழங்குகிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு கூடுதலாக, ஏற்கனவே உள்ள ரூ.2999 திட்டத்தில் கூடுதல் பலன்களையும் வழங்குகறிது. அதாவது தற்போதுள்ள சலுகைகளுக்கு கூடுதலாக, ரூ .2999 திட்டமானது 75ஜிபி கூடுதல் அதிவேக டேட்டா மற்றும் 23 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி உள்ளது. அவ்வாறு வழங்கப்படும் 75ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் 23 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வவுச்சர்களானது, ரீசார்ஜ் செய்த அதே நாளில் பயனர்களுக்கு கிடைத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.2999 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது மற்றும் மொத்தம் 912.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இது ஒரு நாளைக்கு 2.5ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக, அன்லிமிடேடட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.