2022 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதிகள் பட்டியலை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே முதல் ரிஷி சுனக் வரை 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதிகளின் பட்டியலை பார்க்கலாம்.
1.நுபுர் சர்மா:
நபிகள் நாயகம் தொடர்பாக டிவி விவாதம் ஒன்றில் அவதூறாக பேசினார் முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா. அவரது இந்த கருத்து சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்தது. பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவின் இந்த கருத்துக்கு மத்திய அரசுதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தின.பாஜகவில் இருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதேநேரத்தில் நுபுர் சர்மா கருத்தை முன்வைத்து கான்பூர் உள்ளிட்ட இடங்களில் வன்முறைகள் வெடித்தன. நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பல இஸ்லாமிய நாடுகளில் இருந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தது. உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க..லாங் ட்ரைவுக்கு நோ..லோக்கல் ட்ரைவுக்கு எஸ்.. டாடா டியாகோ எலக்ட்ரிக் கார் எப்படி இருக்கு ?
2.திரௌபதி முர்மு:
ஒடிசாவைச் சேர்ந்த 64 வயதான பழங்குடியினத் தலைவரான திரௌபதி முர்மு, ஜூலை 25, 2022 அன்று இந்தியாவின் முதல் பழங்குடியினரும், இரண்டாவது பெண் குடியரசுத் தலைவருமானார். ஜூன் 21, 2022 அன்று ஆளும் என்.டி.ஏ கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவித்தனர். ஜூன் 20, 1958 அன்று ஒடிசாவின் மயூர்பஞ்சில் பிறந்தார் திரௌபதி முர்மு.
புவனேஸ்வரில் உள்ள ரமாதேவி மகளிர் கல்லூரியில் கலைப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முர்மு ஒடிசா அரசில் நீர்ப்பாசனம் மற்றும் மின்துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றியவர். கணவர் ஷியாம் சரண் முர்மு மற்றும் இரண்டு மகன்களை இழந்துள்ளார் முர்மு. 2015 ஆம் ஆண்டில், அவர் ஜார்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார், அந்தப் பதவியில் முதல் பழங்குடித் தலைவர் ஆனார்.
3. ஏக்நாத் ஷிண்டே:
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே (ஏக்நாத்ராவ் சம்பாஜி ஷிண்டே), உத்தவ் தாக்கரே தலைமையிலான முன்னாள் மாநில அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, மாநிலத்தில் புதிய அரசை உருவாக்கினார். பாஜகவுடன் கைகோர்த்து சிவசேனாவை இரண்டாக பிளவுபடுத்தினார். முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே இந்துத்துவா மற்றும் சிவசேனாவின் முன்னாள் தலைவர் பாலாசாகேப் தாக்கரேவின் கொள்கைகளில் இருந்து வெகுதூரம் சென்றுவிட்டார் என்று ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே கூறியிருந்தார். ஜூன் 30, 2022 அன்று மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஷிண்டே பதவியேற்றார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே 2022 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அதிகம் தேடப்பட்டார்.
இதையும் படிங்க..டிசம்பர் 24 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
4.ரிஷி சுனக்:
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் பின்னர், பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக மூன்றாம் சார்லஸ் மன்னரால் நியமிக்கப்பட்டார். 42 வயதான அதிபர் ரிஷி சுனக், இந்து மத நம்பிக்கை கொண்ட இவர், 210 ஆண்டுகளில் இல்லாத இளம் பிரிட்டிஷ் பிரதமர் ஆவார். இங்கிலாந்தில் இந்திய பாரம்பரியத்தின் முதல் இந்து பிரதமர் இவரே. சுனக் 2015 முதல் ரிச்மண்டிற்கான (யார்க்ஸ்) கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். ரிஷி சுனக் வின்செஸ்டர் கல்லூரியில் படித்தார் மற்றும் 2001 இல் ஆக்ஸ்போர்டில் உள்ள லிங்கன் கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் (பிபிஇ) படித்தார்.
2006 இல் ஸ்டாண்ட்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஃபுல்பிரைட் ஸ்காலராக எம்பிஏ படித்தார். யார்க்ஷயர் எம்.பி அக்ஷதாவை மணந்தார். ரிஷி சுனக் 2001 மற்றும் 2004 க்கு இடையில் கோல்ட்மேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியில் ஆய்வாளராக பணியாற்றினார். அவர் ஹெட்ஜ் நிதி மேலாண்மை நிறுவனமான தி சில்ட்ரன்ஸ் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் மேனேஜ்மென்ட்டில் பணிபுரிந்தார் மேலும் 2006 இல் நிறுவனத்தின் பங்குதாரரானார். 2018 முதல் 2019 வரை உள்ளாட்சித் துறைக்கான நாடாளுமன்ற துணைச் செயலாளராகப் பணியாற்றினார். 2019 ஆம் ஆண்டில், அவர் கருவூலத்தின் தலைமைச் செயலாளராக போரிஸ் ஜான்சனால் நியமிக்கப்பட்டார்.
5. நரேந்திர மோடி:
பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்கள் பட்டியலில் உலகளவில் மக்கள் அங்கீகாரத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். நவம்பர் மாதத்திற்கான 77 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டில், மோடி இந்தியாவில் கணிசமான அளவு பிரபலமாக இருந்தார். இந்தியாவில் பிரதமர் மோடியின் பிரபலத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் இந்தியப் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இப்போது வரை ஒரே நேர்கோட்டில் இருப்பது தான் அது.
இதையும் படிங்க..காது கேட்கும் கருவி 10 ஆயிரம் இல்லை.. 350 தான்! கடைசியாக ஒத்துக்கொண்ட அண்ணாமலை!