சியோமி நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் ரெட்மி நோட் 11S ஸ்மார்ட்போன் பிப்ரவரி 9 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இதே நிகழ்வில் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனிடையே மற்றொரு ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதை சியோமி சூசமாக தெரிவித்தது.
தற்போது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 11 என சியோமி அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 11S மாடலுடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் உறுதிப்படுத்தி இருக்கிறது. ரெட்மி நோட் 11 மற்றும் நோட் 11S மாடல்களின் கேமரா மற்றும் சிப்செட் தவிர ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டிருக்கின்றன.
undefined
இரு மாடல்களும் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 4ஜி சிப்செட், 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமராவுன், நான்கு லென்ஸ்கள் வழங்கப்படுகிறது.
ரெட்மி நோட் 11 4ஜி மாடலிலும் 6.43 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, 4ஜி எல்.டி.இ., டூயல் பேண்ட் வைபை, ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப் சி, ப்ளூடூத் 5, 5000mAh பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 13MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 13 வழங்கப்பட்டு இருக்கின்றன.