மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மாரட்போன் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் இந்த மாதமே அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் டிசைன் இணையத்தில் லீக் ஆகி இருந்தது.
அதன்படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எட்ஜ் X30 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும். இதன் வடிவமைப்பும் மோட்டோ எட்ஜ் X30 மாடலை விட சற்றே வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது.
undefined
சர்வதேச சந்தை மற்றும் இந்திய சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் FHD+POLED டிஸ்ப்ளே, 144HZ ரிப்ரெஷ் ரேட், HDR10+ வசதி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் அதிகபட்சமாக 12GB ரேம் வழங்கப்படும் என தெரிகிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், 2MP டெப்த் சென்சார், 60MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ மாடலில் 5000mAh பேட்டரி, 68 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.