எலான் மஸ்கின் தனி விமானத்தை டிராக் செய்யும் இளைஞர் டெஸ்லா காரை வாங்க எலான் மஸ்குடன் டீல் பேசி வருகிறார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தான் பயணம் செய்ய சொந்தமாக தனி விமானம் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில், 19 வயதான ஜாக் ஸ்வீனி டுவிட்டர் அக்கவுண்ட் ஒன்றில் விமானங்கள் பற்றியும், மஸ்க் பயன்படுத்தும் ஜெட் தற்போது எங்கு இருக்கிறது என்பது பற்றியும் தொடர்ச்சியாக தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
டிராக் செய்யும் பாட்-ஐ எடுக்கவும், ஸ்வீனி பயன்படுத்தும் டுவிட்டர் அக்கவுண்டை அழிக்கவும், எலான் மஸ்க் ஸ்வீனிக்கு 5 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3,73,532 கொடுப்பதாக தெரிவித்தார். எனினும், ஸ்வீனி தனக்கு 50 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37,33,710 வேண்டும் என எலான் மஸ்கிடம் தெரிவித்து இருக்கிறார். இந்த தொகையை கொண்டு தனது கல்லூரி கட்டணம் மற்றும் தனக்கு அதிகம் பிடித்த டெஸ்லா காரை வாங்க போவதாகவும் ஸ்வீனி தெரிவித்து இருக்கிறார்.
undefined
ஜாக் ஸ்வீனி பயன்படுத்தி வரும் @ElonJet டுவிட்டர் அக்கவுண்டை 2,07,200 பேர் பின்பற்றி வருகின்றனர். இந்த அக்கவுண்ட் டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் எலான் மஸ்க் தனி விமானத்தை டிராக் செய்வதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்காக ADS-B டேட்டா மற்றும் பாட் ஒன்றை பயன்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்வீனி கேட்டிருக்கும் தொகையை வழங்குவது பற்றி யோசித்து பதில் அளிப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். எனினும், இதுவரை எலான் மஸ்க் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரின் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் டுவிட்டர் மெசேஜ்கள் வாயிலாகவே நடைபெற்றுள்ளன. கடைசியாக இருவரும் ஜனவரி 26 ஆம் தேதி உரையாடி இருக்கின்றனர்.