மத்திய பட்ஜெட் 2022 டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதுபற்றிய விவரங்கள் மத்திய அரசு செயலியில் வெளியிடப்படுகிறது.
மத்திய பட்ஜெட் 2022 வழக்கத்தை விட சற்றே வித்தியாசமாக தாக்கல் செய்யப்பட இருக்கிறது. டிஜிட்டல் இந்தியா இலக்கை அடையும் விதமாக இந்த ஆண்டிற்கான பட்ஜெட் காகிதம் இல்லா முறையில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2022-2023 பற்றிய அறிவிப்புகளை இன்னும் சற்று நேரத்தில் வெளியிட இருக்கிறார்.
இந்த நிலையில், யுனியன் பட்ஜெட் ஆப் பற்றிய விவரங்களை பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ வெளியிட்டு உள்ளது. இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. மத்திய பட்ஜெட் 2022-2023 பற்றிய விவரங்கள் இந்த செயலியில் வெளியிடப்பட இருக்கிறது. பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், செயலியில் இதுபற்றிய விவரங்கள் வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட் ஆங்கிலம் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் வெளியாகிறது.
இந்த செயலியில் பட்ஜெட் உரை, வருடாந்திர நிதி அறிக்கை, மானியங்களுக்கான கோரிக்கை, நிதி மசோதா உள்பட 14 யுனியன் பட்ஜெட் தரவுகளை வழங்குகிறது. யுனியன் பட்ஜெட் செயலியை யார் வேண்டுமானாலும் தங்களின் ஸ்மார்ட்போன்களில் தரவிறக்கம் செய்து பட்ஜெட் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
முன்னதாக 2021-2022 ஆண்டிற்கான பட்ஜெட்டும் காகிதங்கள் இன்றி டிஜிட்டல் முறையிலேயே தாக்கல் செய்யப்பட்டன. நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய மேட் இன் இந்தியா டேப்லெட் உடன் பாராளுமன்றம் வருகிறார்.