Budget 2022: Battery Swapping Policy இனி அது சரிப்பட்டு வராது - பேட்டரி மாற்றும் மையங்களை அமைக்க அரசு முடிவு

By Kevin Kaarki  |  First Published Feb 1, 2022, 1:38 PM IST

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான பேட்டரி ஸ்வாப் செய்யும் மையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. 


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2022-இல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அறிவிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்த எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென பிரத்யேக  மொபிலிட்டி சோன்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. 

இத்துடன் அரசு சார்பில் பேட்டரி ஸ்வாப் செய்யும் மையங்கள் உருவாக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட் உரையின் போது தெரிவித்தார். எலெக்ட்ரிக்  வாகனங்களுக்கு பிரத்யேக சார்ஜிங் மையங்கள் அவசியம் என்பதால், பேட்டரி ஸ்வாப் செய்யும் மையங்கள் பயனர் மத்தியில் பெரும்  வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் இது அதிக இடத்தையும் எடுத்துக் கொள்ளாது.

Tap to resize

Latest Videos

"நகர பகுதிகளில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி சூழல் காரணமாக பேட்டரி ஸ்வாப் செய்யும் மையங்கள் கொண்டுவரப்படும்," என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மற்ற பிளக்-இன் சார்ஜிங் வழிமுறைகளுக்கு எவ்வித பலன்களையும் அரசு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. எனினும், பிரத்யேக மொபிலிட்டி சோன்கள் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் என கூறப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமின்றி டிரோன் பயன்பாட்டு விதிமுறைகள் உருவாக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமல் அறிவித்தார். விவசாயிகள் தங்களின் நிலத்தை கண்கானித்து விவசாயத்தை சிறப்பாக மேற்கொள்ள இது உதவும் என அவர் மேலும் தெரிவித்தார்.

click me!