
இந்திய சந்தையில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ. 12 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனினும், அமேசான் சம்மர் சேல் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ரெட்மி நோட் 11 வாங்குவோர் ரூ. 1,250 மதிப்புள்ள கூப்பன் பெற முடியும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது மேலும் ரூ. 1000 கூடுதல் தள்ளுபடியாக பெற முடியும்.
விலை குறைப்பு:
இந்தியாவில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கூப்பனை சேர்க்கும் போது அதன் விலை ரூ. 11 ஆயிரத்து 749 ஆக குறைந்து விடுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரெட்மி நோட் 11 விலை ரூ. 10 ஆயிரத்து 749 ஆக குறைந்து விடுகிறதி. இந்த சலுகை நான்கு நாட்கள், மே 6 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அட்ரினோ 610 GPU வழங்கப்பட்டு இருக்கிறது.இத்துடன் அதிகபட்ம் 6GB ரேம், 128GB மெமரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 13MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இறுக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 13, 4ஜி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.