டாப் டக்கர் பலன்கள்... விலை ரூ. 98 மட்டுமே... புதிய ரி-சார்ஜ் சலுகையை அறிவித்த வி

By Kevin Kaarki  |  First Published May 2, 2022, 5:11 PM IST

வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் மூன்று புது பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு மூன்று புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. புதிய பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகைகளின் விலை ரூ. 98, ரூ. 195 மற்றும் ரூ. 319 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பலன்களை பொருத்த வரை வி ரூ. 98 பிரீபெயிட் சலுகையில் மொத்தம் 200MB டேட்டா, அன்லிமிடெட்ட வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 15 நாட்கள் ஆகும். வி ரூ. 195 பிரீபெயிட் சலுகை அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ். மற்றும் 2GB டேட்டா உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது. 

Tap to resize

Latest Videos

ரூ. 319 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 2GB டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படகிறது. வி ரூ. 195 மற்றும் ரூ. 319 சலுகைகளில் முறையே 31 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. புது சலுகைகளுடன் வி மூவிஸ் மற்றும் டி.வி. ஆப் சந்தா போன்ற பலன்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. 

இத்துடன் வி ரூ. 319 சலுகையில் பின்ஜ் ஆல் நைட் பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதே சலுகையில் வீக்-எண்ட் ரோல் ஓவர் பலன்கள் வழங்கப்படுகின்றன. இதை கொண்டு பயனர்கள் வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இவை தவிர ரூ. 319 சலுகையில் வி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 2GB பேக்கப் டேட்டாவை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்குகிறது. புதிய சலுகைகள் மட்டும் இன்றி வி நிறுவனம் ரூ. 29 மற்றும் ரூ. 39 விலையில் 4ஜி டேட்டா வவுச்சர்களை அறிவித்து உள்ளது. இவற்றில் முறையே 2GB மற்றும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 29 சலுகையில் இரண்டு நாட்களும், ரூ.  39 சலுகையில் ஏழு நாட்கள் வேலிடிட்டியும் வழங்கப்படுகிறது.

click me!