சோனி நிறுவனத்தின் புதிய பிராவியா சீரிஸ் ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சோனி இந்தியா நிறுவனம் புதிய பிரேவியா X75K 4K டி.வி. மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டி.வி. மாடல்களில் 4K அல்ட்ரா HD LED டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றன. இந்த டி.வி. மாடல்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டி.வி. மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இவற்றில் X1 4K பிராசஸர், லைவ் கலர் தொழில்நுட்பம் உள்ளது. இது தலைசிறந்த வியூவிங் அனுபவத்தை வழங்கும்.
இந்த டி.வி. கிட்டத்தட்ட 4K ரெசல்யூஷன், லைப்-லைக் கலர் மற்றும் காண்டிராஸ்ட் வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள 4K பிராசஸர் X1 X ரியாலிட்டி ப்ரோ தொழில்நுட்பம் உள்ளது. இத்துடன் டால்பி ஆடியோ, கிளியர் பேஸ் தொழில்நுட்பம், பேஸ் ரிப்ளெக்ஸ் ஸ்பீக்கர் உள்ளது. இதன் லோ-எண்ட் சவுண்ட் திரைப்படங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் மியூசிக் உள்ளிட்டவைகளை அனுபவிக்க சிறப்பானதாக இருக்கிறது.
இந்த ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டி.வி. பயனருக்கு பிடித்தமான தரவுகள், சேவைகள் மற்றும் சாதனங்களுக்கு அக்சஸ் வழங்குகிறது. இத்துடன் இந்த டி.வி. ஆப்பிள் ஏர் பிளே 2 மற்றும் ஹோம்கிட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. சோனி ஸ்மார்ட் டி.வி.யை இயக்க அலெக்சாவை இணைத்து அதன் அம்சங்களை குரல் வழியே இயக்க முடியும். இத்துடன் பில்ட் இன் குரோம் காஸ்ட் வசதி உள்ளது. இதை கொண்டு வீடியோக்கள், கேம் மற்றும் செயலிகளை ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் இருந்து டி.வி.யில் இயக்க முடியும்.
சோனி பிராவியா X75K 4K அம்சங்கள்
- 43, 50, 55 மற்றும் 65 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது
- 3840x2160 பிக்சல் ரெசல்யூஷன்
- HDR10, HLG
- 4K பிராசஸர் X1
- 16GB மெமரி
- ஆண்ட்ராய்டு டி.வி.
- மோஷன் புளோ XR 200
- விவிட், ஸ்டாண்டர்டு, சினிமா, கேம், கிராபிக், போட்டோ, கஸ்டம் போன்ற பிக்சர் மோட்கள்
- வைபை 802.11 a/b/g/n/ac
- ப்ளூடூத் 5.0
- ஈத்தர்நெட் இன்புட் X1, RF X1, HDMI இன்புட் x3, யு.எஸ்.பி. போர்ட் x2
- குரோம்காஸ்ட், வாய்ஸ் சர்ச்
- 10W+, 10W, பாபிள் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ
விலை விவரங்கள்:
சோனி 43 இன்ச் KD-43X75K மாடல் விலை ரூ. 55 ஆயிரத்து 990 என துவங்குகிறது
சோனி 50 இன்ச் KD-50X75K மாடல் விலை ரூ. 66 ஆயிரத்து 990 என துவங்குகிறது
புதிய சோனி ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்கள் நாடு முழுக்க அனைத்து சோனி விற்பனை மையங்கள், முன்னணி மின்சாதன விற்பனையகங்கள், ஆன்லைன் வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கும். 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்களின் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.