Realme Pad mini: ரியல்மி பேட் மினி மாடல் விவரங்கள் ரியல்மி இந்தியா வலைதளத்தின் ஸ்பேர் பார்ட்ஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் பிலிப்பைன்ஸ் சந்தையில் தனது ரியல்மி பேட் மினி மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இது ரியல்மி நிறுவனத்தின் இரண்டாவது டேப்லெட் மாடல் ஆகும். இந்த டேப்லெட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், இதன் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ரியல்மி பேட் மினி மாடல் ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து இந்த டேப்லெட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி பேட் மினி மாடல் விவரங்கள் ரியல்மி இந்தியா வலைதளத்தின் ஸ்பேர் பார்ட்ஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதில் புது டேப்லெட் மாடல் வைபை மற்றும் எல்.டி.இ. என இரண்டு வேரிண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.
ரியல்மி பேட் மினி மாடலின் வெளியீடு பற்றி ரியல்மி சார்பில் இதுவரை எந்த தவலும் வழங்கப்படவில்லை. எனினும், இது ரியல்மி பேட் மாடலின் குறைந்த விலை வேரியண்ட் ஆகும். இந்திய சந்தையில் ரியல்மி பேட் மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய ரியல்மி பேட் மினி விலை இதை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் புதிய ரியல்மி பேட் மினி மாடல் குறைந்த விலை டேப்லெட் ஆக இருக்கும் என தெரிகிறது.
ரியல்மி பேட் மினி அம்சங்கள்:
- 8.7 இன்ச் 1340x800 பிக்சல் LCD டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் யுனிசாக் T616 பிராசஸர்
- மாலி-G57 MP1 GPU
- 3GB / 4GB ரேம்
- 32GB / 64GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 8MP பிரைமரி கேமரா
- 5MP செல்ஃபி கேமரா
- ப்ளூடூத் 5, வைபை, 3.5mm ஆடியோ ஜாக்
- 6400mAh பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள்:
ரியல்மி பேட் மினி மாடல் வெளியீடு பற்றி ரியல்மி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இதன் வெளியீடு பற்றிய அதிகாரப்பூபர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மேலும் புதிய ரியல்மி பேட் மினி மாடல் விலை இந்தியாவில் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.