பார்க்க அப்படித் தான் இருக்கும்.. ஆனா இது ஒன்பிளஸ் போன் தான்...!

By Kevin Kaarki  |  First Published Apr 17, 2022, 2:39 PM IST

உண்மையில், ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி லைட் மாடல் தோற்றத்தில் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது.


ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை ஒன்பிளஸ் 10R மாடலுடன் ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர், 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல்வேறு அம்சங்களுடன் விலை உயர்ந்த மாடல் ஆகும். ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி மாடல் ஆகும். 

தற்போது ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைனை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் தோற்றத்தில் இதுவரை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஒன்பிளஸ் மாடல்களை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. உண்மையில், ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி லைட் மாடல் தோற்றத்தில் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. 

Tap to resize

Latest Videos

undefined

அம்சங்கள்:

இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி மாடல் ஒன்பிளஸ் 10R போன்று இரண்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.  ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி மாடல் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முற்றிலும் பிளாஸ்டிக் பாடி மற்றும் பிளாஸ்டிக் ஃபிரேம் கொண்டிருக்கிறது. 

ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி மாடல் பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பதால், இதில் 3.5mm ஹெட்போன் ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த மாடலில் அலர்ட் ஸ்லைடர், ஸ்டீரியோ ஸ்பீக்கர் போன்ற அம்சங்கள் வழங்கப்படாது என கூறப்படுகிறது.

லீக் ஆன விவரங்கள்:

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 6GB / 8GB ரேம், 128GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, IPS LCD ஸ்கிரீன், பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம். 

விலை விவரங்கள்:

ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி மாடல் ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி மாடலாக இருக்கும் என தெரிகிறது. ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை வைத்து பார்க்கும் போது புதிய ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த விலை ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி மாடலின் 6GB ரேம், 128GB மெமரி மாடலுக்கானதாக இருக்கலாம். 

click me!