பவர் பேங்க் இனி எதுக்கு? ரியல்மி நியோ 8 போதும்.. அப்படி என்ன ஸ்பெஷல் இதுல?"

Published : Jan 24, 2026, 10:55 PM IST
Realme

சுருக்கம்

Realme 8,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 Gen 5 பிராசஸருடன் ரியல்மி Neo 8 சீனாவில் அறிமுகம். விலை மற்றும் முழு அம்சங்களை இங்கே காணுங்கள்.

ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி (Realme) நிறுவனம் மீண்டும் ஒரு அதிரடிப் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. சீனாவில் அறிமுகமாகியுள்ள 'ரியல்மி நியோ 8' (Realme Neo 8) ஸ்மார்ட்போன், அதன் பிரம்மாண்டமான பேட்டரி மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

பவர் பேங்க்கே தேவையில்லை!

இந்த போனின் மிகப்பெரிய சிறப்பம்சமே அதன் 8,000mAh பேட்டரி தான். இது சாதாரண போன்களில் இருப்பதை விட இரு மடங்கு அதிகம். ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்களுக்கும் மேலாகப் பயன்படுத்த முடியும். இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தாலும், போன் வெறும் 8.3 மிமீ தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. மேலும், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் டிஸ்பிளே

கேமர்களுக்கு (Gamers) ஏற்றவாறு, இந்த போனில் அதிநவீன 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5' (Snapdragon 8 Gen 5) பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, 6.78-இன்ச் சாம்சங் AMOLED டிஸ்பிளே, 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6,500 நிட்ஸ் உச்சபட்ச பிரகாசம் (Peak Brightness) ஆகியவை பார்வை அனுபவத்தை மெருகேற்றுகின்றன.

கேமரா மற்றும் பிற அம்சங்கள்

புகைப்படம் எடுக்க, 50MP OIS மெயின் கேமரா, 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா வைடு கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. செல்ஃபி எடுக்க 16MP முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போன் IP66, IP68 மற்றும் IP69 ஆகிய மூன்று விதமான வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.

விலை மற்றும் இந்திய வருகை

சீனாவில் இந்த போனின் விலை சுமார் ரூ.33,000 (CNY 2,399) முதல் தொடங்குகிறது. 16GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் கொண்ட டாப் மாடல் விலை சுமார் ரூ.48,000 (CNY 3,699) ஆகும். இந்தியாவில் ரியல்மி Neo 8 எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், விரைவில் எதிர்பார்க்கலாம்.

 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

கம்ப்யூட்டர் பத்தி ஒண்ணுமே தெரியாதா? பரவாயில்லை.. நீங்களும் ஆப் (App) உருவாக்கலாம்.. எப்படின்னு பாருங்க!
எல்லாரும் இந்த போனை தான் தேடுறாங்க.. அப்படி என்ன ஸ்பெஷல்? விலையை கேட்டா ஆடிப்போயிருவீங்க!