Realme Narzo: குறைந்த விலை நார்சோ போன்... விரைவில் வெளியீடு.. லீக் ஆன சூப்பர் தகவல்..!

By Kevin Kaarki  |  First Published Apr 12, 2022, 3:48 PM IST

Realme Narzo: இந்த ஸ்மார்ட்போன் இரண்டு விதமான மெமரி வேரிண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.


ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் ஏப்ரல் 30 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு விதமான மெமரி வேரிண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ரியல்மி நிறுவனம் தான் அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட்போன் மாடலில் சார்ஜ் வழங்கப்படாது என அறிவித்து இருந்தது. 

இனி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரியல்மி மற்றும் நார்சோ பிராண்டு ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர் வழங்கப்படாது என ரியல்மி அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் ரியல்மி நிறுவனம் நார்சோ 50A பிரைம் மாடலை இந்தோனேசியா சந்தையில் இரண்டு விதமான மெமரி ஆப்ஷன்களில் அறிமுகம் செய்தது. 

Tap to resize

Latest Videos

அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி நார்சோ 50A பிரைம் மாடல் இந்திய சந்தையில் இரண்டு விதமான மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தோனேசியா சந்தையில் ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன் 4GB ரேம், 64GB மெமரி மற்றும் 4GB ரேம், 128GB மெமரி  என இரண்டு வேயரிண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளாஷ் பிளாக் மற்றும் பிளாஷ் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 50A பிரைம் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

- 6.6 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே
- யுனிசாக் T612 பிராசஸர்
- 4GB ரேம்
- 64GB மற்றும் 128GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யு.ஐ. ஆர் எடிஷன் 
- 50MP பிரைமரி கேமரா
- மோனோகுரோம் போர்டிரெயிட் சென்சார்
- மேக்ரோ சென்சார்
- 8MP செல்ஃபி கேமரா
- 5000mAh பேட்டரி
- 18 வாட் சார்ஜிங் வசதி
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்

ரியல்மி நிறுவனம் புதிய நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் போது, ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வழங்கப்படாது என்பதை மட்டும் ரியல்மி அறிவித்து இருக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என ரியல்மி விளக்கம் அளித்து இருக்கிறது. 

click me!