Oppo F21 Pro: ஒப்போவின் புது மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள்... சில மணி நேரங்களில் வெளியீடு..!

By Kevin KaarkiFirst Published Apr 12, 2022, 3:06 PM IST
Highlights

Oppo F21 Pro : ஒப்போ F21 ப்ரோ மற்றும் ஒப்போ F21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களுடன் ஒப்போ என்கோ ஏர் 2 ப்ரோ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஒப்போ F21 ப்ரோ மற்றும் ஒப்போ F21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை இன்னும் சில மணி நேரங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு மாடல்களும் ஒப்போ நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆகும். முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களின் படி ஒப்போ F சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் 64Mஜ பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டது. 

இத்துடன் 4500mAh பேட்டரி மற்றும் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. ஒப்போ F21 ப்ரோ மற்றும் ஒப்போ F21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களுடன் ஒப்போ என்கோ ஏர் 2 ப்ரோ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அறிமுக நிகழ்வு நேரலை விவரங்கள்:

ஒப்போ F21 ப்ரோ, ஒப்போ F21 ப்ரோ 5ஜி மற்றும் ஒப்போ என்கோ ஏர் 2 ப்ரோ மற்றும் ஒப்போ என்கோ ஏர் 2 ப்ரோ மாடல்களின் அறிமுக நிகழ்வு இன்று மாலை 5 மணிக்கு துவங்குகிறது. அறிமுக நிகழ்வு ஒப்போ அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரலை செய்யப்பட இருக்கிறது.

ஒப்போ F21 ப்ரோ சீரிஸ் எதிர்பார்க்கப்படும் விலை:

ஒப்போ F21 ப்ரோ மாடல் சில தினங்களுக்கு முன் வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தான் தற்போது ஒப்போ F21 ப்ரோ மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வங்கதேசத்தில் ஒப்போ F21 ப்ரோ 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை BDT 27 ஆயிரத்து 990 இந்திய மதிப்பில் ரூ. 24 ஆயிரத்து 640 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்திய சந்தையில் ஒப்போ F21 ப்ரோ விலை ரூ. 26 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் எ ன தெரிகிறது. இத்துடன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒப்போ என்கோ ஏர் 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 3 ஆயிரத்து 499 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 3 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

ஒப்போ F21 ப்ரோ மற்றும் ஒப்போ F21 ப்ரோ 5ஜி மாடல்களில் 6.43 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்- வங்கதேசத்தில் அறிமுகமான மாடலிலும் இதே பிராசஸர், வழங்கப்பட்டு இருந்தது. புதிய ஒப்போ F21 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

புகைப்படங்களை எடுக்க இரு மாடல்களிலும் 64MP பிரைமரி கேமராவுடன் மொத்தம் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம். வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ F21 ப்ரோ மாடலில் 64MP பிரைமரி கேமரா, 12MP இரண்டாவது கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இரு மாடல்களிலும் 4500mAh பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. 

click me!