Realme 9 4G: சூப்பர் சலுகைகளுடன் விற்பனைக்கு வந்த ரியல்மி 9 ஸ்மார்ட்போன்... விலை எவ்வளவு தெரியுமா?

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 12, 2022, 02:32 PM IST
Realme 9 4G: சூப்பர் சலுகைகளுடன் விற்பனைக்கு வந்த ரியல்மி 9 ஸ்மார்ட்போன்... விலை எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

Realme 9 4G: புதிய ரியல்மி 9 4ஜி மாடல் விற்பனை ரியல்மி ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் துவங்கியது. ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை 4ஜி ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 9  4ஜி மாடலில் 6.4 இன்ச் 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 8GB ரேம், 128GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ரியல்மி 9 4ஜி மாடல் விற்பனை ரியல்மி ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

விலை விவரங்கள்:

ரியல்மி 9 ஸ்மார்ட்போன் சன்பர்ஸ்ட் கோல்டு, ஸ்டார்கேஸ் வைட் மற்றும் மீடியோர் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. புதிய ரிய்லமி 9 4ஜி 6GB ரேம், 128GB மெமரி வேரியண்ட் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்றும் 8GB ரேம், 128GB மெமரி வேரியண்ட் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இன்று நடைபெற்ற முதல் விற்பனையின் போது இரு வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 15 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 16 ஆயிரத்து 999 என மாற்றப்பட்டு இருந்தது. 

ரியல்மி 9 4ஜி அம்சங்கள்:

- 6.4 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 6GB / 8GB (LPPDDR4x) ரேம்
- 128GB (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யு.ஐ. 3.0
- 108MP பிரைமரி கேமரா, f/1.76, LED பிளாஷ்
- 8MP 119° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2MP B&W போர்டிரெயிட் கேமரா
- 2MP 4cm மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.45
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 33 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

Safety Gadgets: தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிஜிட்டல் அரண்: டாப் 4 பாதுகாப்பு கேட்ஜெட்டுகள் இதோ!
Amazon Tablet Offers : ரூ.16,999க்கு OnePlus Pad.. iPad முதல் Xiaomi Pad வரை செம்ம ஆஃபர்.. அதிரடி விலை குறைப்பு