ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் GT நியோ 3 ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம், ஏப்ரல் 29 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி விட்டது.
இந்த நிலையில், ஏப்ரல் 25 ஆம் தேதி புதிய நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ரியல்மி இந்தியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புது நார்சோ ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வு சரியாக 12.30 மணிக்கு துவங்குகிறது. மேலும் அறிமுக நிகழ்வு ரியல்மியின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளங்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது.
கடந்த மாதம் ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன் இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் யுனிசாக் டைகர் T612 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி UI R எடிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4GB ரேம், 64GB மற்றும் 128GB என இரண்டு விதமான மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எனினும், இந்தியாவில் மெமரி ஆப்ஷ்கள் எப்படி வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சிறப்பம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி நார்சோ 50A பிரைம் மாடலில் 6.6 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 8MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி மட்டுமின்றி ரியல்மி நிறுவனம் அடுத்தடுத்து ஸ்மார்ட் டி.வி. X ஃபுல் ஹெச்.டி. 24 வாட் டால்பி ருவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 29 ஆம் தேதி ரியல்மி நிருவனம் ரியல்மி பேட் மினி, பட்ஸ் Q2s மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ரியல்மி பேட் மினி மாடல் அம்சங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி இருந்தது.
ரியல்மி பேட் மினி அம்சங்கள்:
அதன்படி ரியல்மி பேட் மினி மாடலில் 8.7 இன்ச் 1340x800 பிக்சல் LCD டிஸ்ப்ளே, ஆக்டா கோர் யுனிசாக் T616 பிராசஸர், மாலி-G57 MP1 GPU வழங்கப்படும் என கூறப்படுகிகிறது. இத்துடன் 3GB ரேம், 32GB மெமரி, 4GB ரேம், 64GB இண்டர்னல் மெமரி மற்றும்
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5, வைபை, 3.5mm ஆடியோ ஜாக், 6400mAh பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.