பட்ஜெட்டில் அடங்கும் விலை.. Realme 12X 5G வந்தாச்சு.. இந்திய சந்தையில் எப்போ வெளியாகும்? விலை & ஸ்பெக் இதோ!

By Ansgar R  |  First Published Mar 26, 2024, 3:20 PM IST

Realme 12X 5G Launch in India : பிரபல Realme நிறுவனம் தனது புதிய மிட் ரேஞ்சு பட்ஜெட் ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் விரைவில் வெளியிடவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.


Realme 12X 5G, சமீபத்தில் சீனாவில் MediaTek Dimensity 6100+ SoC மற்றும் 15W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியுடன் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதை உறுதி செய்துள்ளது அந்நிறுவனம். உலக அளவில் ஏற்கனவே வெளியான அதே அம்சங்களுடன் இந்தியாவிலும் இந்த போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறித்து. 

Realme 12X 5G, இந்தியாவில் ஏப்ரல் 2ம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகும் என்று Realme நிறுவனம் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தியது. இந்த போன் Flipkart மற்றும் Realme India இணையதளம் வழியாக கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Realme 12X 5Gன் இந்திய வெர்சன் பச்சை மற்றும் ஊதா வண்ண விருப்பங்களில் கிடைக்கும். 

Tap to resize

Latest Videos

108 எம்பி கேமரா.. 12 ஜிபி ரேம்.. 6000 mAh பேட்டரி.. 15 ஆயிரம் ரூபாய்க்கு சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்..

சமீபத்திய Realme வெளியிடும் அதன் 12 சீரிஸ் போன்களில் பெரிய வட்ட பின்புற கேமரா யூனிட்டை கொண்ட ஒரு போனாகத்தான் இதுவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. Realme 12X 5Gஆனது இந்தியாவில் MediaTek Dimensity 6100+ SoC மூலம் இயக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 45W வயர்டு SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மூலம் இந்த் ஃபோன் ஆதரிக்கப்படும் என்பதையும் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. 

சீனாவில், Realme 12X 5G ஆனது எல்இடி ஃபிளாஷ், 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் IP54 ரேட்டிங்குடன், 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா யூனிட்டுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான Realme UI 5.0 உடன் அனுப்பப்படுகிறது. 12GB + 256GB மாடல் தோராயமாக 17,000 ரூபாய்க்கும் 12GB + 512GB மாடல் 20,000 ரூபாய்க்கும் விற்பனையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

70 சதவீத தள்ளுபடி.. ஸ்மார்ட் வாட்ச் விலை ரூ.2 ஆயிரம் கூட இல்லைங்க.. செம ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க..

click me!