மார்ச் 21 அன்று, இரவு 7.34 மணிக்கு, POEM-3 பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது. அதன் பணி நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு வடக்கு பசிபிக் பெருங்கடலில் விழுந்திருக்கிறது எனவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திங்கள்கிழமை, மார்ச் 21 அன்று மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. பிஎஸ்எல்வி (PSLV) ஆர்பிட்டல் எக்ஸ்பெரிமென்டல் மாட்யூல்-3 (POEM-3) வெற்றிகரமாக பூமியின் வளிமண்டலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மீண்டும் நுழைந்தாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
போயம்-3 (POEM-3) ஜனவரி 1, 2024 அன்று தொடங்கப்பட்ட PSLV-C58 / XPoSat பணியின் ஒரு பகுதியாகும். செயற்கைக்கோள்களை அவற்றின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பிறகு, ராக்கெட் நிலை சோதனைகளை நடத்துவதற்கான தளமாக மாற்றப்பட்டது.
"பிஎஸ்எல்வி அல்லது போயம்-3 இன் கடைசி நிலை 650 கிமீ முதல் 350 கிமீ வரை மாற்றப்பட்டது. இது அதன் ஆரம்பகட்ட மறுவருகையை எளிதாக்கியது" என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
மார்ச் 21 அன்று, இரவு 7.34 மணிக்கு, POEM-3 பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது. அதன் பணி நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு வடக்கு பசிபிக் பெருங்கடலில் விழுந்திருக்கிறது எனவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும்; முதல் முறை குரல் கொடுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்!
ஒரு மாத காலத்தில், POEM-3 சுற்றுப்பாதையில் இருந்து திரும்ப பூமிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கு முன்பு, ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட கருவிகளின் மூலம் ஒன்பது வெவ்வேறு சோதனைகளை மேற்கொண்டது.
POEM-3 ஆனது புதிதாக உருவாக்கப்பட்ட உள்நாட்டு அமைப்புகளில் தொழில்நுட்ப விளக்கங்கள் மற்றும் அறிவியல் சோதனைகளை மேற்கொள்ள ஒன்பது வெவ்வேறு பேலோடுகளுடன் கட்டமைக்கப்பட்டது. இவற்றில் ஆறு பேலோடுகள் அரசு சாராத நிறுவனங்களால் வழங்கப்பட்டவை. இந்தப் பேலோடுகளின் பணிகள் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்பட்டன என்று இஸ்ரோ கூறினார்.
POEM இயங்குதளம் குறைந்த செலவில் குறுகிய கால விண்வெளி பரிசோதனைகளை நடத்துவதற்கும், கல்வித்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து புதிய முயற்சிகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் வாய்ப்பை வழங்குகிறது. பூமிக்குத் திரும்பும்போது குறைவான குப்பைகளை மட்டுமே விண்வெளியில் விட்டுவிட்டு வருகிறது.
"பொறுப்பான விண்வெளி ஆய்வுகளில் இஸ்ரோ உறுதியாக இருக்கிறது. இஸ்ரோ விண்வெளி சுற்றுப்பாதையில் குப்பைகளைக் குறைக்கும் நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் எதிர்கால விண்வெளி முயற்சிகளுக்கு நிலையான சூழலை உறுதி செய்கிறது" என்று இஸ்ரோ கூறியிருக்கிறது.
கொரோனா போல புதுசா படையெடுக்கும் பெருந்தொற்று... எச்சரிக்கும் தொற்றுநோய் வல்லுநர்கள்!