ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன் குறித்த டீசர்கள் வெளிவந்துள்ளன. அதில், நத்திங் ஸ்மார்ட்போனை போல், மினுமினுக்கும் எல்இடி லைட்கள் இருப்பதாக தெரிகிறது. இதிலுள்ள பிற சிறப்பம்சங்களை இங்குக் காணலாம்
ரியல்மி நிறுவனம் தனது GT சீரிஸ் வரிசையில் தற்போது புதிதாக Realme GT Neo 5என்ற ஸ்மார்ட்போனை தயாரித்து உள்ளது. இது வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தியாவில் இந்தி புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த எந்த விவரங்களையும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இந்த ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனின் தோற்றம், டிசைன் பற்றிய டீசர்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, GT Neo 5 5G ஸ்மார்ட்போனானது பர்ப்பிள் ஃபேண்டஸி கலரில் வருகிறது. வளைந்த பின்புற பேனலில் ஏஜி கிளாஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஊதா வண்ண நிறத்தில் மேட் பூச்சு தோற்றத்தில் பளபளப்பாக உள்ளது.
undefined
கேமராவுக்கு கீழே இரண்டு செங்குத்து கோடுகள் லைட்டிங் தொழில்நுட்பத்துடன் உள்ளன. இரண்டு வட்ட வடிவ கேமரா, RGB லைட்டுக்காக ஃபோனில் ஒரு பெரிய டைனாமிக் ஐலேண்ட் உள்ளது. பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு இருப்பதால், மேக்ரோ லென்ஸ் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.. கேமரா சென்சார்களுக்கு அடுத்ததாக LED ஃபிளாஷ் வைக்கப்பட்டுள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன 8+ Gen 1 SoC பிராசசர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே பிராசசர் OnePlus 11R 5G ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ரியல்மி போனின் செயல்திறன் நன்றாக இருக்கும். கேமரா தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில், இதில் சோனி IMX890 50MP லென்ஸ் கொண்ட பிரைமரி கேமரா இருப்பதாக ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) தொழில்நுட்ப வசதியுடன் இந்த கேமரா வருகிறது.
ஐபோன்களில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஒரு ‘வீடியோ கேம்’ முடக்கம்.. காரணம் என்ன?
GT Neo 5 ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்கும் வசதியும், அதற்கு ஏற்ப 240W சார்ஜரும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து வெறும் 30-வினாடி சார்ஜ் செய்தாலே 2 மணிநேரம் போன் பேச முடியும். போனின் பிற அம்சங்கள் ஏற்கெனவே ஆன்லைனில் சில தளங்களில் வெளியாகின. அதன்படி 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 144Hz ரெப்ரெஷ் ரேட், 8MP அல்ட்ரா-வைட் கேமரா, 2MP மேக்ரோ சென்சார் ஆகியவை இருக்கலாம்.
செல்ஃபிக்களுக்காக போனின் முன்பக்கத்தில் 16MP கேமரா, 5000mAh சக்தி கொண்ட பேட்டரி எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் இதுதொடர்பான முழுமையான விவரங்கள் வெளியாகும்.