ஷாவ்மி நிறுவனம் புதிதாக ஷாவ்மி பேட் 6, பேட் 6 ப்ரோ ஆகியவற்றை தயாரித்து வரும் நிலையில், இதில் உள்ள சில சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன.
ஷாவ்மி நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு Xiaomi Mi Pad 5 , Mi Pad 5 Pro அறிமுகம் செய்தது. அதன்பிறகு Xiaomi Pad 5 Pro கடந்த ஆண்டு வந்தது. அந்த வரிசையில் தற்போது Xiaomi Pad 6 மற்றும் Xiaomi Pad 6 Pro குறித்த தகவல்கள் சீனாவின் டெக் தளங்களில் வந்து்ளன.
முன்னதாக இந்தியாவில் ஷாவ்மி பேட் 5 மட்டுமே வந்தது. பேட் 5 ப்ரோ என்பது சீனாவில் மட்டுமே அறிமுகமாகி இருந்தது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. அதே போல், இப்போது வரவுள்ள பேட் 6, பேட் 6 ப்ரோ ஆகியவை இந்தியாவுக்கு எப்போது வரும் என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை.
ஷாவ்மி பேட் 6 சிறப்பம்சங்கள்:
சீன தளங்களில் வெளியான தகவலின்படி, பேட் 6, பேட் 6 ப்ரோ இந்த இரண்டும் சுமார் 11-இன்ச் (2880x 1800) டிஸ்ப்ளே கொண்டுள்ளதாக தெரிகிறது. 120Hz அல்லது 144Hz ரெப்ரெஷ் ரேட், டால்பி விஷன், HDR10+ வசதி ஆகியவை இடம் பெறலாம். இவற்றில் பழைய மாடல்களைப் போன்ற எல்சிடி திரை இருக்குமா அல்லது AMOLED திரைக்கு மேம்படுத்தப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
டுவிட்டருக்கு எதிராக புதிய ஆப் உருவாக்கும் முன்னாள் பணியாளர்கள்!
Mi Pad 5 Pro, Xiaomi Pad 5 Pro போலவே Xiaomi Pad 6 டேப்லெட்டிலும் Snapdragon 870 SoC பிராசசர் இருக்கலாம். ஆனால் Xiaomi Pad 6 Pro வேரியண்டில் Snapdragon 8+ Gen 1 SoC பிராசசருக்கு மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரையிலான மெமரி எதிர்பார்க்கலாம், மேலும் இது 67W வேகமான சார்ஜிங் வசதி இருக்கும்., ஆனால் பேட்டரி திறன் மற்றும் கேமரா விவரக்குறிப்புகள் இன்னும் கிடைக்கவில்லை.
வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளாக Xiaomi Pad 6 மற்றும் Pad 6 Pro அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு Xiaomi Pad 5 Pro ஆனது கடந்த ஆண்டு ஜூன் மாத அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.