ஐபோன்களில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஒரு ‘வீடியோ கேம்’ முடக்கம்.. காரணம் என்ன?

By Dinesh TG  |  First Published Feb 2, 2023, 12:01 PM IST

2022 ஆண்டில் அறிமுகமான சிறந்த கேம் என்று பெயரெடுத்த ‘அபெக்ஸ் லெஜண்ட்’ என்ற வீடியோ கேமின் மொபைல் பதிப்பின் சேவை நிறுத்தப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 


கேமிங் துறையில் கடந்தாண்டு பல நிறுவனங்கள் உருவாக்கிய வீடியோ கேம்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அவற்றில் EA ஸ்போர்ட்ஸ், ரெஸ்பான் எண்டெர்டெயின்மெண்ட் தரப்பில் கடந்தாண்டு மே மாதம் வெளியான வீடியோ கேம் ‘அபெக்ஸ் லெஜண்ட்’  ஆகும். இது கடந்தாண்டு வெளியான வீடியோ கேம்களில் சிறந்த வீடியோ கேம் என்ற பெயர் பெற்றது. 

இந்த நிலையில், ‘அபெக்ஸ் லெஜண்ட்’ வீடியோ கேமின் மொபைல் வெர்ஷன் வரும் மே மாதம் முதல் நிறுத்தப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொபைல் பயனர்களின் வேகத்திற்கு ஏற்ப இந்த வீடியோ கேமை மேம்படுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது. இப்போதும் இந்த வீடியோ கேம் விளையாடும் போது சில சில தடைகள், மெதுவாக ப்ளே ஆவது போன்ற சிக்கல்கள் உள்ளன. 

Tap to resize

Latest Videos

இதன் காரணமாக வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் ‘அபெக்ஸ் லெஜண்ட்’ மொபைல் பதிப்பிற்கான வீடியோ கேம் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. ஆனால், கணினி பதிப்பு தொடர்ந்து செயல்படும். எனவே, ஏற்கெனவே கணினியில் ‘அபெக்ஸ் லெஜண்ட்’ வீடியோ கேமை இன்ஸ்டால் செய்தவர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். இன்-ஆப் பர்செஸ் செய்தவர்கள், முதலீடு செய்தவர்களுக்கு, ஒப்பந்தத்தின்படி கொடுத்த பணம்  திரும்ப தரப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டருக்கு எதிராக புதிய ஆப் உருவாக்கும் முன்னாள் பணியாளர்கள்!

‘அபெக்ஸ் லெஜண்ட்’ கேமைப் பொறுத்தவரையில் கடந்தாண்டு மே மாதம் அறிமுகமானது. 60க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தளத்தில் இருந்து அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேம் ‘அபெக்ஸ் லெஜண்ட்’ ஆகும். ஆப் ஸ்டோரில் 5க்கு 4.5 ரேட்டிங்கும், கூகுள் பிளே ஸ்டோரில் 5க்கு 4.3 அளவிலான ரேட்டிங் பெற்றுள்ளது. சுமார் 15 மில்லினுக்கும் அதிகமான பிளேயர்கள் முன்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அபெக்ஸ் லெஜண்ட் வீடியோ கேம் அறிமுகமாகி ஒரு வருடத்திற்குள்ளாகவே முடக்கப்படுவது கேமிங் பிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘அபெக்ஸ் லெஜண்ட் வீடியோ கேம் போலவே மற்றொரு வீடியோ கேம் உருவாக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!