டுவிட்டருக்கு எதிராக புதிய ஆப் உருவாக்கும் முன்னாள் பணியாளர்கள்!

By Dinesh TG  |  First Published Feb 1, 2023, 11:37 PM IST

ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பணியாளர்கள் ஒன்றிணைந்து, ட்விட்டருக்கு போட்டியாக SPILL என்ற தளத்தை உருவாக்கி வருகின்றனர். 


கடந்தாண்டு அக்டோபர் மாதம் எலோன் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு, பெருமளவிலான பணியாளர்களை நீக்கினார். எலான் மஸ்கின் கடுமையான நடவடிக்கைகளால் பல பணியாளர்கள் தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்துவிட்டனர்.  முன்பு ட்விட்டரில் 7,000 க்கும் அதிகமான பணியாளர்கள் இருந்த நிலையில், தற்போது வெறும் 2,300 ஊழியர்களே உள்ளனர்.

இப்படியான சூழலில், டுவிட்டரில் முன்பு பணியாற்றிய பணியாளர்கள், SPILL என்ற தளத்தை உருவாக்கி வருகின்றனர். இது டுவிட்டருக்கு போட்டியாக உருவெடுக்கும் என்ற முனைப்பில் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.  SPILL டெவலப்பர்கள் இது தொடர்பாக ஒரு சிறிய ஸ்னீக்-பீக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ 17 வினாடிகள் ஓடக்கூடியதாக உள்ளது. அதில் வரவிருக்கும் ஸ்பில் தளம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த தளமானது மக்கள் தங்கள் கருத்தைக் கூறுவதற்கும், படங்களைப் பகிர்வதற்கும், இன்னும் பல்வேறு விஷயங்களை மேற்கொள்ளவும் உதவுகிறது.

Latest Videos

undefined

SPILL தளத்தை உருவாக்கியது எப்படி?

பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பெற்ற நிதியுதவியின் அடிப்படையில் ஸ்பில் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதே ட்விட்டர் வரிசையில், இந்த புதிய செயலியின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  இதுவரையில் சுமார் $2.75M அளவிலான தொகை திரட்டப்பட்டுள்ளதா தெரிகிறது. 

பல ஆண்டுகளுக்குப் பிறகு Sony Walkman அறிமுகம்! விலை மட்டும் கொஞ்சம்…

SPILL வேலைவாய்ப்பு?

இதுமட்டுமின்றி, நிறுவனம் ஒரு சில பணிகளுக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளது. தற்போது நான்கு விதமான பணிகள் பொறுப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடைசியாக, SPILL உழைப்புக்கு பின்புலத்தில் இருந்து செயல்படும் குழுவானது துடிப்புடன் செயல்படுவதாகவும், இந்த புதிய நிறுவனம் சிறப்பானதை கடைப்பிடிக்கப்படிக்கிறதா என்பதையும் உறுதிசெய்கிறது.

எலான் மஸ்க் டுவிட்டரை கைப்பற்றிய பிறகு பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். அவருடைய கடுமையான நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. எலான் மஸ்கிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் புகார் அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!