நீங்கள் போஸ்ட்பெய்ட் பிரிவில் பிஎஸ்என்எல் சேவைகளைப் பயன்படுத்த விரும்பினால், தொடக்க நிலை பிளானான ரூ.199 திட்டத்தில் சேரலாம்.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான BSNL நிறுவனத்தில் மொபைல், பிராட்பேண்ட், ஃபிக்ஸட்லைன், ஏர் ஃபைபர் மற்றும் பிற சேவைகள் உள்ளன. BSNL போஸ்ட்பெய்ட் சேவைகள் இன்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் 4G, 5G சேவை உள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல், BSNL நெட்வொர்க்கை பலரும் விரும்புகிறார்கள்.
பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்டு பெறுவதற்கு நீங்கள் அருகிலுள்ள BSNL அலுவலகத்திற்குச் சென்று KYC படிவம் நிரப்பி, பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்தினால் போதும். போஸ்ட்பெய்டு திட்டத்தில் சேர்ந்துவிடலாம். நீங்கள் போஸ்ட்பெய்ட் பிரிவில் பிஎஸ்என்எல் சேவைகளைப் பயன்படுத்த விரும்பினால், ஆரம்ப நிலை திட்டமான ரூ.199 பிளானில் சேரலாம். இதில் நிறைய சலுகைகள் உள்ளன.
பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் ரூ 199 பிளான்:
மாதாந்திர பில்லிங் முறையை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு BSNL பல்வேறு போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் அன்லிமிடேட் வாய்ஸ்கால், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் பலன்கள் உள்ளன. மேலும், சர்வதேச ரோமிங் போன்ற பல்வேறு ஆட்-ஆன் சேவைகளும் உள்ளன.
பாதுகாப்பு வைப்பு
BSNL வழங்கும் மலிவான போஸ்ட்பெய்ட் சலுகையானது ரூ.199 விலையில் வருகிறது. இந்த சேவையை பெற விரும்பும் பயனர்கள் ரூ.100, ரூ.500 என முறையே உள்ளூர் மற்றும் எஸ்டிடி கட்டணமாக செலுத்த வேண்டும். ஐஎஸ்டி சேவைகளுக்கு ரூ.2,000 செலுத்த வேண்டும்.
Vi Offer: வோடஃபோனில் புதிதாக ரூ. 99 ரீசார்ஜ் பிளான்! குறைந்த விலையில் நிறைந்த பலன்கள்!!
BSNL 199 திட்டத்தின்பலன்கள்:
MTNL மூலம் எந்த நெட்வொர்க்கிற்கும் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற குரலை அனுபவிக்க முடியும். சுருக்கமாக சொல்லப் போனால், இந்த திட்டத்தில் நீங்கள் அன்லிமிடெட் குரலை அனுபவிக்க முடியும். ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 25 ஜிபி மொத்த டேட்டாவுடன் வருகிறது, இதை 2ஜி, 3ஜி மற்றும் 4ஜியில் பயன்படுத்தலாம். பயனர்களுக்கு 75 ஜிபி டேட்டா ரோல்ஓவர் அம்சமும் உள்ளது. அதாவது உங்களுக்கு வழங்கப்பட்ட டேட்டா தீரவில்லை எனில், அது அடுத்த மாத டேட்டாவுடன் சேர்ந்துவிடும். டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு, டேட்டா கட்டணங்கள் ஒரு எம்பிக்கு ஒரு பைசா, ஒரு ஜிபிக்கு ரூ.10.24 என்ற வகையில் கட்டணம் விதிக்கப்படும்.