Realme 9i price : 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50MP கேமரா - ரியல்மி 9i விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

By manimegalai a  |  First Published Jan 18, 2022, 1:10 PM IST

ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ரியல்மி 9i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.


ரியல்மி நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது நம்பர் சீரிசில் அறிமுகமாகி இருக்கும் முதல் ரியல்மி ஸ்மார்ட்போன் ஆகும். ரியல்மி 9i என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+IPS LCD 90Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 50MP பிரைமரி கேமரா, f/1.8, 2MP மேக்ரோ லென்ஸ், f/2.4, 2MP B&W லென்ஸ், f/2.4, 16MP இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா, f/2.1 வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்தவரை ரியல்மி 9i 4GB/6GB ரேம், 64GB/128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

undefined

ரியல்மி 9i அம்சங்கள்

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4GB/6GB ரேம்
- 64GB/128GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 90Hz அல்ட்ரா ஸ்மூத் டிஸ்ப்ளே
- 50MP பிரைமரி கேமரா, f/1.8
- 2MP மேக்ரோ லென்ஸ், f/2.4
- 2MP B&W லென்ஸ், f/2.4
- 16MP இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா, f/2.1
- 5000mAh பேட்டரி
- 33 வாட் டார்ட் சார்ஜ்
- 2 நானோ கார்டு ஸ்லாட்
- மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்
- யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
- டூயல் ஸ்பீக்கர்
- ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி யு.ஐ. 2.0
 
இந்தியாவில் ரியல்மி 9i ஸ்மார்ட்போன் ப்ரிசம் பிளாக் மற்றும் ப்ரிசம் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB/64GB மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6GB/128GB விலை ரூ. 15,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை ஜனவரி 22 ஆம் தேதி துவங்குகிறது. முதல் விற்பனையின் போது புதிய ரியல்மி 9i ஸ்மார்ட்போனிற்கு வங்கி சார்ந்த சிறப்பு தள்ளுபடி, கேஷ்பேக் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

click me!