Maruti Celerio price : புதிய செலரியோ CNG விலை இவ்வளவு தானா?

By manimegalai a  |  First Published Jan 18, 2022, 12:28 PM IST

மாருதி சுசுகி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் புதிய செலரியோ CNG மாடலை அறிமுகம் செய்தது.
 


மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் செலரியோ ஹேட்ச்பேக் மாடலின் CNG வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய செலரியோ CNG துவக்க விலை ரூ. 6.58 லட்சம்,எக்ஸ்-ஷோரூம் ஆகும். செலரியோ CNG வேரியண்ட் மிட்-ஸ்பெக் VXi ட்ரிம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால் புதிய செலரியோ CNG மாடலில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

முன்னதாக ஆல்டோ, எஸ் பிரெஸ்ஸோ, ஈக்கோ, வேகன் ஆர் மற்றும் எர்டிகா மாடல்களில் CNG கிட் வழங்கப்பட்ட நிலையில், தற்போது செலரியோ மாடலிலும் CNG வசதி வழங்கப்பட்டுள்ளது. செலரியோ ஸ்டாண்டர்டு எடிஷனில் உள்ள 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் CNG கிட் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் தற்போது 57 பி.ஹெச்.பி. திறன், 82 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

Latest Videos

undefined

இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. மாருதி சுசுகி செலரியோ CNG மாடலில் 60 லிட்டர் CNG டேன்க் உள்ளது. இந்த கார் லிட்டருக்கு 35.60 Km/kg வரை செல்லும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. 

"ஃபேக்டரி-ஃபிட் செய்யப்பட்ட CNG வாகனம் என்பதால் வாடிக்கையாளர்கள் வழக்கமான வாரண்டி மற்றும் இதர சலுகைகளை மாருதி சுசுகி சர்வீஸ் நெட்வொர்க் இடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். பசுமை போக்குவரத்து முறையை கருத்தில் கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் CNG வாகனங்கள் விற்பனை 22 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத பாதுகாப்பான CNG போக்குவரத்து தீர்வுகளை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. இந்தியாவில் பசுமை வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் எங்கள் குறிக்கோளை அடைய புதிய செலரியோ CNG உதவும். எங்களின் ஒட்டுமொத்த விற்பனையில் முந்தைய தலைமுறை செலரியோ S-CNG மாடல் மட்டும் 30 சதவீத பங்குகளை பெற்றுத் தந்தது," என மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த நிர்வாக இயக்குனர் சஷாங்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

தோற்றத்தில் புதிய மாடல் வெறும் CNG பேட்ஜ் மட்டுமே வித்தியாசமாக கொண்டிருக்கிறது. மற்றப்படி இந்த மாடலும் பெட்ரோல் வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் ஏ.சி., செண்ட்ரல் லாக்கிங், பவர் விண்டோ, 60:40 ஸ்ப்லிட் ரியர் சீட், மிரர்களை எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் செய்யும் வசதி, பாதுகாப்பிற்கு டூயல் ஏர்-பேக், ஏ.பி.எஸ்., ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி செலரியோ CNG மாடல் ஹூண்டாய் சாண்ட்ரோ CNG, விரைவில் அறிமுகமாக இருக்கும் டாடா டியாகோ CNG போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இதுதவிர ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களின் CNG வேரியண்ட் உருவாக்கும் பணிகளில் மாருதி சுசுகி ஈடுபட்டு வருகிறது.
 

click me!