108MP கேமராவுடன் மிட்-ரேன்ஜ் ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா..?

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 07, 2022, 05:14 PM IST
108MP கேமராவுடன் மிட்-ரேன்ஜ் ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா..?

சுருக்கம்

புதிய ரியல்மி 9 ஸ்மார்ட்போன் ரியல்மி, ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஏப்ரல் 12 ஆம் தேதி விற்பனைக்கு வருக்கிறது.

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரியல்மி 9 ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது அந்த நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரியல்மி 8 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். புதிய ரியல்மி 9 மாடலில் 6.4 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ,ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஹாலோகிராஃபிக் டிசைன், பிளாஸ்மா ஆட்டம் கோட்டிங், 5000mAh பேட்டரி, 33 வாட் டார்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. 

ரியல்மி 9 அம்சங்கள்:

- 6.4 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 6GB / 8GB (LPPDDR4x) ரேம்
- 128GB (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யு.ஐ. 3.0
- 108MP பிரைமரி கேமரா, f/1.76, LED பிளாஷ்
- 8MP 119° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2MP B&W போர்டிரெயிட் கேமரா
- 2MP 4cm மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.45
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 33 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ரியல்மி 9 ஸ்மார்ட்போன் சன்பர்ஸ்ட் கோல்டு, ஸ்டார்கேஸ் வைட் மற்றும் மீடியோர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முதல் விற்பனையின் போது இரு வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 15 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 16 ஆயிரத்து 999 என மாற்றப்பட்டு இருக்கும். 

புதிய ரியல்மி 9 ஸ்மார்ட்போன் ரியல்மி, ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஏப்ரல் 12 ஆம் தேதி விற்பனைக்கு வருக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா? பணத்தை ஆட்டைய போடுபவர்களுக்கு 'செக்'.. கூகுளின் மாஸ் திட்டம்!
எலான் மஸ்க் வைத்த 'செக்'.. கூகுள், ChatGPT எல்லாம் காலி? பங்குச்சந்தையை கலக்கும் Grok 4.20!