இவ்வளவு குறைபாடுகளா.. மொதத்ததில் Realme 10 Pro + ஸ்மார்ட்போனை வாங்கலாமா?

By Dinesh TGFirst Published Dec 14, 2022, 6:08 PM IST
Highlights

இந்தியாவில் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ள நிலையில், அதில் சில குறைபாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, இந்த ரியல்மி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இதையும் கருத்தில் கொள்ளலாம்.

இந்தியாவில் கடந்த வாரம் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. பார்ப்பதற்கு பிரீமியம் டிசைனில் இருப்பதால் நல்ல வரவேற்பு உள்ளது. நடுத்தரமான பிரிவில், வளைந்த,பெசல் குறைவான டிஸ்ப்ளே கொண்டிருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இருப்பினும் சில குறைபாடுகளும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. 

கண்ணுக்கே தெரியாத மெனு ஐகான்கள்:

ஸ்மார்ட்போனின் முகப்பு பக்கத்தில் தேடல் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. நமக்கு தேவையான ஆப்ஸை உடனடியாக எடுப்பதற்கு பயன்படுத்துவதற்காக இந்த ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் செயலியின் பெயரை டைப் செய்தாலே, அதுதொடர்பான எல்லா செயலிகள், மெனுக்களும் திரையில் தோன்றும். ஆனால், அவ்வாறு தேடல் அம்சத்தில் தோன்றும் செயலிகளின் ஐகான்கள் மிகமிகச் சிறியதாக உள்ளன. இவை விரைவில் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பீக்கரின் தரம்:

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஸ்பீக்கரின் தரம் மிக மோசமாக உள்ளது. சத்தம் மட்டும் தான் அதிகமாக வருகிறதே தவிர, அதன் துல்லியம் சரியாக இல்லை. பழைய டவுன் பஸ், குழாய் ஸ்பீக்கர் செட்டில் உள்ளது போல் ‘கீச்’ சத்தம் சற்று அதிகமாக உள்ளது. பேஸ் தன்மை அவ்வளவாக இல்லை.

கொஞ்சம் பொறுத்திருங்க.. இந்த 3 ஸ்மார்ட்போன்கள் வரப் போகுது!

விளம்பரத் தொல்லை:

இதற்கு முன்பெல்லாம் ரியல்மி நிறுவனம் ரெட்மி ஸ்மார்ட்போன்களை அதிகம் வசைபாடியது. ரெட்மி ஸ்மார்ட்போன்களில் விளம்பரங்கள் அதிகம் இருக்கும், ஆனால், ரியல்மி ஸ்மார்ட்போன்களில் விளம்பரங்களே கிடையாது என்றெல்லாம் விளம்பரம் செய்தனர். 

ஆனால், ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் தேவையே இல்லாத செயலிகள், கேம்கள், விளம்பரங்கள் உள்ளன. குறிப்பாக பிளே ஸ்டோரிலேயே இல்லாத செயலிகள், 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்களுக்கான செயலிகள் அதிகம் உள்ளன. இவற்றை எளிதாக முடக்கி வைக்கவும் முடியாது. ஆப் மார்க்கெட் என்பதற்கு சென்று, அங்குள்ள செட்டிங்ஸ் பகுதியில் தான் இத்தகைய செயிலிகள் வேண்டாம் என்று அனைத்து வைக்க முடியும். இவ்வாறு எத்தனை பேர் அதை முடக்கி வைப்பார்கள். எனவே, இதுவும் ரியல்மியின் குறைபாடுகளில் ஒன்று தான்.

எனவே, ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் பார்க்காமல், அதிலுள்ள குறைபாடுகளையும் கருத்தில் கொள்ளும்படி பயனர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

click me!