இனி வரும் காலங்களில் எது வேண்டுமென்றாலும் , கையில் ஒரு மொபைல் ,அதில் ஒரு சில செயலி மற்றும் இதனை எல்லாம் செயல்படுத்துவதற்கு இன்டர்நெட் கனக்ஷன் இவை மூன்றும் இருந்தாலே போதும், உலகமே நம் கையில் ......
அதாவது மத்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து சேவையையும் எளிதில் தெரிந்துக் கொள்ளும் விதமாக ஆர்.பி.ஐ செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியானது ,ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கக்கூடியது .
கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ஆர்.பி.ஐ செயலியை பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் .இந்த செயலியில், பல விழிப்புணர்வு தகவல்கள், புதிய ரூபாய் நோட்டு குறித்த அனைத்து விவரங்கள் , எப்பொழுது புதிய ரூபாய் நோட்டு வெளியிடப்படும் , இண்டரஸ்ட் ரேட் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த செயலி மூலம் தெரிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் , இந்த செயலி மூலம் மக்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் எளிதில் பார்த்துக்கொள்ளும் விதமாகவும் அதே வேளையில் இந்த செயலியில் புஷ் எனும் ஆப்ஷனும் உள்ளது
undefined
இந்த ஆப்ஷனை பயன்படுத்தி, ரிசர்வ் வங்கி வெளியிடும் முக்கிய அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .