ஐபோன் 15 பிளஸின் 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி வேரியண்ட் மீது விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஐபோன் 16 சீரிஸ் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக ஐபோன் 15 பிளஸை குறைந்த விலையில் வாங்குவதற்கான அருமையான வாய்ப்பு வந்துள்ளது. ஐபோன் 16 சீரிஸ் வருவதால் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்ற கணக்கீட்டில் ஐபோனின் முந்தைய மாடல்களுக்கு பெரும் தள்ளுபடி சமீபத்தில் ஆன்லைன் விற்பனை தளங்களில் காணப்படுகிறது என்றே கூறலாம் .
அந்த வகையில் ஐபோன் 15 பிளஸின் விலையை இந்தியாவில் ஃபிளிப்கார்ட் குறைத்துள்ளது. ஆப்பிள் இந்தியா இணையதளத்தில் 89,600 ரூபாய் ஐபோன் 15 பிளஸின் 128 ஜிபி அடிப்படை வேரியண்டின் உண்மையான விலை ஆகும். ஆனால் 13,601 ரூபாய் தள்ளுபடியுடன் 75,999 ரூபாய்க்கு ஃபிளிப்கார்ட் விற்பனை செய்கிறது. இதனுடன் கூடிய எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் பயன்படுத்தினால் பெரும் தள்ளுபடியில் ஐபோன் 15 பிளஸ் மொபைலை வாங்கலாம்.
undefined
இதனுடன் ஐபோன் 15 பிளஸின் 256 ஜிபி, 512 ஜிபி வேரியண்ட்களுக்கும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 85,999 ரூபாய், 1,05,999 ரூபாய் என விலையாகும். இவற்றுக்கு ஆப்பிள் இந்தியா இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள உண்மையான விலை 99,600, 1,19,600 ஆகும். 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்DR OLED டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 15 பிளஸ், A16 சிப்பில் இயங்குகிறது.
iOS 17 இதன் இயங்குதளம். யூஎஸ்பி டைப்-சி சார்ஜர், டூயல் ரியர் கேமரா (48 மெகாபிக்சல் சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்), 12 மெகாபிக்சல் ட்ரூடெப்த் செல்ஃபி கேமரா ஆகியவை இந்த மாடலின் பிற சிறப்புகள். 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி என மூன்று வேரியண்ட்களில் ஐபோன் 15 பிளஸ் கிடைக்கிறது.
ஹோண்டா ஆக்டிவா vs டிவிஎஸ் ஜூபிடர்: அதிக மைலேஜ்.. பெரிய ஸ்டோரேஜ் - எந்த ஸ்கூட்டர் சிறந்தது?