பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்.. செப்டெம்பரில் துவங்கும் விற்பனை - இணையத்தில் லீக்கான தகவல்!

By Ansgar RFirst Published Sep 2, 2024, 11:00 PM IST
Highlights

Flipkart Big Billion Days Sale : பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் நடத்தும் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாக்களில் இதுவும் ஒன்றாகும்.

பொதுவாக ஆண்டின் பிற்பகுதியில், வருடம்தோறும் நடைபெறும் இந்த விற்பனையானது ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், டிவிக்கள், ஏசிகள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற பலதரப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் பெரிய தள்ளுபடிகளை கொண்டுவருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விற்பனை இந்த செப்டம்பர் மாத இறுதியில் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் அதன் கிக்-ஆஃப் தேதி இணையத்தில் லீக்கானதாகவும் கூறப்படுகிறது. 

இணையத்தில் லீக்கான தகவல் 

Latest Videos

Flipkart Big Billion Days Sale தேதியானது கூகுள் தேடல் பட்டியலில் இப்பொது கசிந்ததாகக் கூறப்படுகிறது, அது வரும் செப்டம்பர் 29ம் தேதி முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த செப்டம்பர் 29 என்ற தேதி Flipkart Plus உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்களுக்கு, இந்த பிக் பில்லியன் டே விற்பனை ஒரு நாள் கழித்து, செப்டம்பர் 30 அன்று தான் தொடங்கும். இது வழக்கம்போல ஏழு நாள்கள் அல்லது அதற்கு மேல்கூட நடைபெறும் வாய்ப்புள்ளது. 

80% வரை வரை தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்வாட்ச் வாங்கலாம்! இன்றே கடைசி நாள்!

கடந்த ஆண்டு, ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை சரியாக அக்டோபர் 8ம் தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதன் ப்ரீமியம் சந்தாதாரர்களுக்கு 24 மணிநேர ஆரம்ப அணுகல் காலம் ஒதுக்கப்பட்டது. மேலும் அக்டோபர் 9ம் தேதி பொதுமக்களுக்காக அந்த பிக் பில்லியன் டே திறக்கப்பட்டு, அக்டோபர் 15 வரை நடைபெற்றது. மொபைல்கள், மடிக்கணினிகள், ஆடியோ, எலக்ட்ரானிக்ஸ், வாழ்க்கை முறை, ஃபேஷன், அழகு மற்றும் வீட்டு மேம்பாடு போன்ற பல்வேறு வகைகளில் 80 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்கியது. 

பிளிப்கார்டில் இப்பொது உள்ள ஆபஃர்

தற்போது, ​​பிக் பச்சட் டேஸ் விற்பனையானது Flipkartல் லைவில் உள்ளது. இது கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அன்று துவங்கிய நிலையில், வரும் செப்டம்பர் 5 வரை தொடரும். Flipkart Axis வங்கி கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளில் கேஷ்பேக் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொபைல் ஸ்லோவா இருக்கா? இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க... புது ஃபோன் மாதிரி மாத்தலாம்!

click me!