போகோ நிறுவனத்தின் புத்தம் புதிய Poco X5 Pro ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமாகவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இதில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்குக் காணலாம்.
பட்ஜெட் விலையில் நிறைந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக போகோ நிறுவனம் புதிதாக Poco X5 Pro என்ற ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்று மாலை 5.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. போகோ தனது யூடியூப் சேனலில் Poco X5 Pro ஸ்மார்ட்போனின் அறிமுக விழாவை நேரலையாக ஒளிபரப்புகிறது.
இதுதொடர்பாக Poco நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Poco X5 Pro ஆரம்பகால விற்பனையின் ஒரு பகுதியாக Flipkart தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு, Poco X4 Pro ஸ்மார்ட்போனானது ரூ.18,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது X5 Pro ஸ்மார்ட்போன் அதே விலையில் உள்ளதா அல்லது அதிக விலை உள்ளதா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Poco X5 Pro: அறிமுக விழா நேரம், லைவ்ஸ்ட்ரீம் லிங்க் மற்றும் பிற விவரங்கள்:
Poco X5 Pro அறிமுகம் பிப்ரவரி 6 அன்று இந்திய நேரப்படி (IST) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது, அதாவது இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி Flipkart, போகோ நிறுவனத்தின் YouTube சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. Poco X5 அறிமுகம் என்பது உலகளாவிய நிகழ்வாகும், இந்த விழாவில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிவிக்க வாய்ப்புள்ளது. அவை: Poco X5 மற்றும் Poco X5 Pro. இந்தியாவில், Poco X5 Pro மட்டுமே இப்போதைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
94 கடன் வழங்கும் செயலிகள் உட்பட 232 செயலிகள் முடக்கம்!
Poco X5 Pro: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை
Poco X5 Pro ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, Poco X5 Pro 5G ஆனது Snapdragon 778G SoC பிராசசரில் வருகிறது. சில குறிப்பிட்ட தளங்களில் வெளியான தகவலின்படி, இந்த போனின் விலை ரூ. 20,999 என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இது Poco X4 Pro ஸ்மார்ட்போனை விட விலை அதிகமாக இருக்கும். மற்றபடி, ஸ்னாப்டிராகன் 778G SoC பிராசசர் கொண்ட சாம்சங், iQOO மற்றும் பொதுவாக ரூ. 30,000க்கு அதிகமாக இருக்கும்.
Poco X5 Pro போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரலாம். 108MP பின்புற கேமரா, 120HZ AMOLED டிஸ்ப்ளே மற்றும் மெலிதான டிசைன் இருக்கலாம். Poco X5 Pro ஆனது 67W ஃபாஸ்ட் சார்ஜிங், அதற்கு ஏற்ப 5,000 mAh சக்தி கொண்ட பேட்டரி இருக்கலாம்.