இருசக்கர வாகனங்களுக்கான சிஎன்ஜி சிலிண்டர் தாயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்.....!!!
இந்தியாவில் முதல் முறையாக சிலிண்டர் மூலம் இயங்கும் வகையில் , இருசக்கர வாகனமான ஹோண்டா ஆக்டிவா உருவாக்கப்பட்டது. முதலில் சோதனை ஓட்டமாக , 4௦ வாகனங்களை பீட்சா பாய்ஸ் பயன்படுத்தி வந்தனர்.
இந்த சோதனையை வெற்றி கண்டதையடுத்து தற்போது, இருசக்க்கர வாகனங்களுக்கான சிஎன்ஜி சிலிண்டர் தயாரிக்கும் பணியில் லவோடா நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது. இதற்கு தேவையான சிலிண்டர் மற்றும் அதற்கு தேவையான உபகரணங்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
மேலும், ஐடியுகே நிறுவனத்திற்கும் அனுமதி அளித்துள்ளது. . இந்த சிலிண்டர் தயாரிப்புக்கான அனுமதியை புனேயில் உள்ள ஏஆர்ஏஐ மற்றும் குர்காவ்னில் உள்ள ஐசிஏடி அமைப்புகள் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎன்ஜ காஸ் சிலிண்டரால் பயன்கள் என்ன ?
அதாவது , இரு சக்கர வாகனத்தில் ,2 சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும், ஒவ்வொரு சிலிண்டரிலும், 1.20 கிலோ அளவிற்கு வாயுவை நிரப்ப முடியும்.
இந்த சிலிண்டரில் உள்ள வாயுவை பயன்படுத்தி சுமார் 13௦ கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். அதாவது, ஒரு கிலோ மீட்டருக்கு 6௦ காசுகள் மட்டுமே ஆகுமாம் .
காஸ் மூலம் இயங்கும் இந்த வாகனம் பயன்பாட்டிற்கு வந்தால் , சுற்றுச்சூழல் மாசுபடுவது முற்றிலும் தடுக்க முடியும். இதன் காரணமாக , இனி வரும் காலங்களில் காஸ் மூலம் இயங்கும் வாகனங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்கப்படுகிறது