
சலுகையில் சக்கைப்போடு போட்ட ஏர்டெல் ..!! திசை திரும்பும் வாடிக்கையாளர்கள்...!!!
அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் , தற்போது போட்டி போட்டுக்கொண்டு பல சலுகையை அறிவித்து வருகிறது. அதன்படி, ஏர்டெல் நிறுவனம் , தங்கள் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது, புதியதாக ஏர்டெல் வாடிக்கையாளர்களாக மாற விரும்பும் அனைவருக்கும் , புதிய சலுகையை அறிவிச்சி ஒருக்கு ஏர்டெல்
புது வாடிக்கையாளர்கள் :
வேறு நெட்வொர்க்கில் இருந்து , ஏர்டெல் நெட்வொர்க்கிற்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு வருடத்திற்கு , ரூபாய் 9 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 4 ஜி டேட்டாவை வழங்குகிறது. அதன்படி,இந்த சலுகையை பெற நாளை முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை, கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்கள் :
345 ரூபாய்க்கான திட்டம்
அன்லிமிடட் லோக்கல் மற்றும் எஸ் டி டி கால்ஸ் ( அனைத்து நெட்வொர்க்குக்கும் பொருந்தும்)
4 ஜிபி வரை 4 ஜி டேட்டா சர்வீஸ் ( 1 ஜி பி + 3 ஜி பி கூடுதலாக கிடைக்கும் )
பயன்பாடு : ஒரு மாதம் வரை
இந்த சலுகையை பெற , முதலில் ரீசார்ஜ் செய்யும் போது, “ மை ஏர்டெல் ஆப்” மூலம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள் :
போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள் , MyPlan Infinity plans மூலம், 3 ஜி பி கூடுதலாக பெற முடியும்.
மேலும், 549 ரூபாய்க்கான திட்டம் :
அன்லிமிடட் கால்ஸ்
6 GB data (3GB regular data + 3GB free data)
இதேபோன்று, 799 ரூபாய்க்கான திட்டம் :
அன்லிமிடட் கால்ஸ்
8 GB data (5 GB regular data + 3GB free data)
இந்த சலுகையை , போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள் , "மை ஏர்டெல் ஆப்" மூலம் பெறலாம் .
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.