எங்கும் பேடிஎம்..எதிலும் பேடிஎம்....! அடுத்த கட்டநகர்வு “பேடிஎம் வங்கி “- அனுமதி வழங்கியது ரிசர்வ் வங்கி....!!!
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி அவர்கள், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார் .
அதனை தொடர்ந்து தற்போது, ரொக்கமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது . இந்நிலையில் தற்போது அனைத்து வகையான கட்டணங்களையும் பேடிஎம் மூலம் செலுத்த மக்கள் தொடங்கியுள்ளனர்.
பேடிஎம் வங்கி ?
அதாவது, விவரம் தெரிந்தவர்கள் பேடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் நடுத்தர மக்கள் இது குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.இருந்த போதிலும், டிஜிட்டல் இந்தியா கனவோடு பயணிக்கும் நம் மக்கள், முழுக்க முழுக்க , ரொக்க மில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்பதற்காக , மத்திய அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பேடிஎம் நிறுவனம் , பேமென்ட் வங்கி தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி . அவ்வாறு பேமண்ட் வங்கி தொடங்கினால், எத்தனை நாட்களுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என்ற தகவல் சரியாக குறிப்பிடபடவில்லை. இருந்தபோதிலும், தொடக்கத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் , பேமென்ட் வங்கி தொடங்கப்போவதாக, பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய்சேகர் சர்மா தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பு : பேமென்ட் வங்கி தொடங்க தற்போது 4௦௦ கோடி அளவிற்கு , முதலீடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதில் 51 சதவீத முதலீடு பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய்சேகர் சர்மாவிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.