Oppo Reno 7 Pro price : மாஸ் அப்டேட் - வேற லெவல் அம்சங்களுடன் அறிமுகமான ரெனோ 7 சீரிஸ்

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 04, 2022, 02:45 PM ISTUpdated : Feb 04, 2022, 03:09 PM IST
Oppo Reno 7 Pro price : மாஸ் அப்டேட் - வேற லெவல் அம்சங்களுடன் அறிமுகமான ரெனோ 7 சீரிஸ்

சுருக்கம்

ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரெனோ 7 மற்றும் ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. 

ஒப்போ  நிறுவனம் இந்தியாவில் ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே ரெனோ 7 5ஜி மற்றும் ரெனோ 7 ப்ரோ 5ஜி என இரு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரு மாடல்களில் ரெனோ 7 ப்ரோ 5ஜி ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும்.

ஒப்போ  ரெனோ 7 ப்ரோ 5ஜி அம்சங்கள்

- 6.5  இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- மீடியாடெக் டிமென்சிட்டி 1200-MAX பிராசஸர்
- 12GB ரேம், 256GB மெமரி
- 50MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 32MP செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஓ.எஸ். 12
- 4500mAh பேட்டரி
- 65 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் 

ஒப்போ  ரெனோ 7 5ஜி அம்சங்கள்

- 6.4  இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்
- 8GB ரேம், 256GB மெமரி
- 64MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 32MP செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஓ.எஸ். 12
- 4500mAh பேட்டரி
- 65 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் 

ஒப்போ ரெனோ 7 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஸ்டார்-டிரையல்ஸ் புளூ மற்றும் ஸ்டார்லைட் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 

விலை விவரங்கள்:

ஒப்போ ரெனோ 7 5ஜி ரூ. 28,999
ஒப்போ ரெனோ 7 ப்ரோ 5ஜி ரூ. 39,999

ஒப்போ ரெனோ 7 ப்ரோ 5ஜி விற்பனை பிப்ரவரி 8 ஆம் தேதியும், ரெனோ 7 5ஜி மாடல் விற்பனை பிப்ரவரி 17 ஆம் தேதியும் துவங்குகிறது. இரு மாடல்களும் ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும். இத்துடன் வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது. 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?
நாளை முதல் வேட்டை ஆரம்பம்! சாம்சங் S24 முதல் ஐபோன் வரை... பிளிப்கார்ட் அறிவித்த மெகா ஆஃபர்கள்!