Noise ColorFit Icon Buzz : போதும், லிஸ்ட் பெருசா போய்ட்டு இருக்கு! புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்த நாய்ஸ்

By Kevin Kaarki  |  First Published Feb 4, 2022, 12:04 PM IST

நாய்ஸ் பிராண்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 


நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட நாய்ஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் இது ஆகும். புதிய ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ் கலர்ஃபிட் ஐகான் பஸ் எனஅழைக்கப்படுகிறது. இதில் ஏராளமான புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அதன்படி 24x7 இதய துடிப்பு சென்சார், பிலட் ஆக்சிஜன் டிராக்கர், வாய்ஸ் அசிஸ்டண்ட், பல்வேறு ஸ்போர்ட் மோட்கள், வாய்ஸ் காலிங் வசதி உள்ளிட்டவை இந்த மாடலில் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் அழைப்புகளை மணிக்கட்டு மூலமாகவே டிஸ்-கனெக்ட் செய்ய முடியும். 

Tap to resize

Latest Videos

undefined

"அழைப்புகளை மேற்கொள்வது, பாடல்களை இயக்குவது, வானிலை அறிந்து கொள்வது என எல்லாவற்றையும் உங்களின் ஸ்மார்ட்வாட்ச் கொண்டே செய்து முடித்து விடுங்கள். நாய்ஸ் நிறுவனத்தின் முதல் காலிங் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வாய்ஸ் அசிஸ்டண்ட், பில்ட்-இன் கேம்ஸ் என பல்வேறு வசதிகள் உள்ளன. இதன் விலை ரூ. 3,499 மட்டுமே. இது அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் கிடைக்கிறது," என நாய்ஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

இந்தியாவில் புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ஐகான் பஸ் மாடலின் விலை ரூ. 4,999 ஆகும். எனினும், இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது அறிமுக சலுகை என்பதால், விரைவில் இதன் விலை மாற்றப்பட்டு விடும். இந்த ஸ்மார்ட்வாட்சத் ஜெட் பிளாக், மிட்நைட் கோல்டு, ஆலிவ் கோல்டு மற்றும் சில்வர் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

முன்னதாக எவால்வ் 2, கேலிபர் மற்றும் அல்ட்ரா 2 போன்ற ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை நாய்ஸ் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிய மாடலாக கலர்ஃபிட் ஐகான் பஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

click me!