அனைவரும் தன்னை விட பெரிய பவர் பேங்க் வைத்திருந்ததால், உலகின் மிகப்பெரிய பவர் பேங்க் ஒன்றை சீனாவை சேர்ந்தவர் உருவாக்கி இருக்கிறார்.
சீனாவை சேர்ந்த மின்சாதன வல்லுனரான் ஹேண்டி கெங் உலகின் பெரிய பவர் பேங்க் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த பவர் பேங்க் 27,000,000mAh திறன் கொண்டது ஆகும். இந்த பவர்பேங்க் எப்படி உருவாக்கப்பட்டது என்ற வீடியோவையும் அவர் யூடியூபில் வெளியிட்டுள்ளார்.
அனைவரும் என்னை விட பெரிய பவர் பேங்க் வைத்திருந்தனர். எனக்கு இது சந்தோஷத்தை கொடுக்கவில்லை. இதனால் எனக்கு நானே 27,000,000mAh திறன் கொண்ட போர்டபில் பவர் பேங்க்-ஐ உருவாக்கி கொண்டேன் என அவர் தெரிவிக்கிறார். இந்த பவர் பேங்க் கொண்டு 3000mAh பேட்டரி கொண்ட சுமார் 5 ஆயிரம் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய முடியும்.
இந்த பவர் பேங்க் உருவாக்க கெங் Zலெக்ட்ரிக் கார்களில் வழங்கப்படும் அளவிலான பெரிய பேட்டரி பேக்-ஐ பயன்படுத்தி இருக்கிறார். இந்த பவர் பேங்க் 5.9x3.9 அடி அளவு கொண்டது ஆகும். இதில் மொத்தம் 60 போர்ட்கள் உள்ளன. இது 220 வோல்ட் எலெக்ட்ரிக் வோல்டேஜ் அவுட்புட் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த பவர் பேங்க் கொண்டு டி.வி., வாஷிங் மெஷின்களே் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளிட்டவைகளையும் சார்ஜ் செய்திட முடியும். இதனை எளிதில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல ஏதுவாக பவர் பேங்க்-இல் கெங் சக்கரங்களை பொருத்தி இருக்கிறார்.