ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 பில்ட்-இன் ஃபிட்னஸ் டிராக்கிங் சென்சார் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் நிகழ்வு ஒன்றை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் SE 3, புதிய ஐபேட் ஏர், சிலிகான சிப் கொண்ட மேக்புக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவைதவிர ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் ஃபிட்னஸ் டிராக்கிங் வசதி கொண்ட சென்சார்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற அம்சத்தை சாம்சங் சோதனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் புதிய டிசைன், மேம்பட்ட சிப்செட், அதிநவீன ஆடியோ சார்ந்த அம்சங்கள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், நீண்ட பேட்டரி பேக்கப் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் இந்த மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் லாஸ்-லெஸ் ஆடியோ கோடெக் அம்சம் வழங்கப்படலைாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய தகவல்களின் படி புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டாலும், இது 2022 நான்காவது காலாண்டு வரை விற்பனைக்கு வராது என கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த மாடலின் விற்பனை இந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரலாம்.