ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஸ் ஏர் 3 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஸ் ஏர் 3 ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்களை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த இயர்போன் இரண்டு வித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இது ரியல்மி ஏற்கனவே அறிமுகம் செய்த ரியல்மி பட்ஸ் ஏர் 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய ரியல்மி இயர்பட்ஸ் மாடலின் அம்சங்கள், விலை விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதன்படி புதிய ரியல்மி பட்ஸ் ஏர் 3 மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், இன்-இயர் டிடெக்ஷன், டூயல் டிவைஸ் கனெக்ஷன் மற்றும் யு.எஸ்.பி டைப் சி சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ரியல்மி இயர்பட்ஸ் பிப்ரவரி மாதத்திலேயே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த மாடல் கேலக்ஸி வைட் மற்றும் ஸ்டேரி புளூ நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக வலைதள உரையாடல் ஒன்றில் ரிய்லமி துணை தலைவர் மாதவ் சேத் ரியல்மி பட்ஸ் ஏர் 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த காலாண்டிலேயே அது அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இதுதவிர இணையத்தில் ஏற்கனவே வெளியான தகவல்களில் ரியல்மி பட்ஸ் ஏர் 3 விலை ரூ. 4 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணம் செய்யப்படும் என கூறப்பட்டது. முந்தைய பட்ஸ் ஏர் 2 விலை ரூ. 3,299 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இயர்போனில் மூன்று மைக்ரோபோன்கல், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, டிரான்ஸ்பேரன்சி மோட் வழங்கப்படுகிறது. இவை பயனர்களுக்கு பிரத்யேக ஆடியோ அனுபவத்தை வழங்கும். இத்துடன் லோ லேடென்சி மோட் வசதி, பேஸ் பூஸ்ட் பிளஸ் மோட், இன்-இயர் டிடெக்ஷன் போன்ற அம்சங்கள் இந்த இயர்பட்ஸ்-இல் வழங்கப்படலாம். இதில் உள்ள பேட்டரி 30 மணி நேர்திற்கான பிளேபேக் வழங்கும் என கூறப்படுகிறது.