Oppo A18 அறிமுகம்: 6.56-இன்ச் HD+ டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி - என்னென்ன அம்சம்?

By Manikanda Prabu  |  First Published Sep 29, 2023, 10:13 AM IST

Oppo A-சீரிஸ் வரிசையில் புத்தம் புதிய Oppo A18 மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் குறித்து இங்கு காணலாம்


Oppo A18 ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட Oppo A38இல் உள்ள அம்சங்களுடன் இதிலும் உள்ளன. Oppo A-சீரிஸ் வரிசையில் புத்தம் புதிய Oppo A18 செல்போனானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவில் கிடைக்கிறது. MediaTek Helio G85 SoC மற்றும் 5,000mAh பேட்டரியுடன் Oppo A18 வருகிறது. பட்ஜெட் போனான இது சிங்கிள் ஸ்டோரேஜ் வேரியண்ட், கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.

Oppo A18 அம்சங்கள்

Tap to resize

Latest Videos


Oppo A18ஆனது, 6.56-இன்ச் HD+ (1,612 x 720 பிக்சல்கள்) IPS LCD டிஸ்ப்ளே, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 720nits பிரகாசம் மற்றும் 89.90 ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்தில் வருகிறது. ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான ColorOS 13.1 உடன் இரண்டு சிம்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கையால் தொடமுடியாத அளவு சூடேறும் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள்: கேஜெட் பிரியர்களுக்கு ஏமாற்றம்!

Mali G52 MC2 GPU உடன் இணைக்கப்பட்ட octa-core MediaTek Helio G85 SoC, 4GB LPDDR4x ரேம் மற்றும் 128GB EMMC5.1 இன்பில்ட் ஸ்டோரேஜ் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை சேமிப்பை விரிவாக்கலாம். மேலும், மற்றொரு 4ஜிபி வரை மெய்நிகர் ரேம் நீட்டிப்பும் உள்ளது.

Oppo A18 கேமிராவில் 8 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்காக, 5 மெகாபிக்சல் முன்பக்கக் கேமரா, டிஸ்ப்ளேயின் மேற்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச்சில் கிடைக்கிறது.

Oppo A18 இல் Oppo 5,000mAh பேட்டரி உள்ளது. பாதுகாப்பிற்காக, கைபேசியில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. 4G, Wi-Fi, Bluetooth 5.3, GPS மற்றும் USB Type-C ஆகியவை உள்ளன. செல்போனில் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளது. 188 கிராம் எடையும், 163.74mm x 75.03mm x 8.16mm அளவிலும் உள்ளது.

click me!